15
August, 2026

A News 365Times Venture

15
Saturday
August, 2026

A News 365Times Venture

"1970-க்குப் பிறகு பிறந்த ஒரு முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றுகிறார்!" – மாணிக்கம் தாகூர்

Date:

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தாளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கொடியேற்றுவதை ‘புதிய தலைமுறை அரசியல்’ என்று பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர்.

“தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் இன்று ஒரு முக்கியமான, வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.

முதன்முறையாக, மாண்புமிகு முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேசியக் கொடியை ஏற்றுகிறார்.

முதலமைச்சர் விஜய்

1970-க்குப் பிறகு பிறந்த ஒரு தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேசியக் கொடியை ஏற்றுவது, புதிய தலைமுறை அரசியலின் வருகையைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

மக்களின் இதயங்களையும் எண்ணங்களையும் வென்று இந்தப் பொறுப்பை அடைய அவர் மேற்கொண்ட கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தியாகங்கள் பாராட்டுக்குரியவை.

59 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள் திரு.ராஜேஷ் குமார் மற்றும் திரு.விஸ்வநாதன் அவர்கள் தமிழ்நாடு அமைச்சரவையின் அங்கமாக இருப்பது பெருமைக்குரிய தருணம்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்தில் பங்கேற்று, அதை நேரில் காணும் இந்த வரலாற்றுப் பொறுப்பை அவர்கள் சிறப்பாக நிறைவேற்ற எனது வாழ்த்துகள்.

தமிழ்நாட்டின் நலனையும், மக்களின் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி நாம் அனைவரும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுவோம்”.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நிர்வாக ரீதியாக மட்டுமே மத்திய அரசோடு ஒத்துழைக்கிறோம்; ஆனால்.!" – விஜய்| 80வது சுதந்திர தினம் | Live Updates

விஜய் உரை"மக்களே... ஓட்டு போட்டுவிட்டோம். கடமை முடிந்துவிட்டது என்று ஒதுங்கி போய்விடாதீர்கள்....

‘ஹார்முஸ் அமெரிக்காவுக்கு சொந்தம்’ – ட்ரம்ப் அதிரடி; 'அது எப்போதும் முடியாது' – ஈரான் பதிலடி

தெரிந்தோ, தெரியாமலோ ஈரான் போரின் தொடக்கத்தில் இருந்தே ஹார்முஸ் நீர்ச்சந்தி அந்தப்...

எஸ்.பி.வேலுமணி ஆப்சென்ட்; “சீப்பை ஒளிச்சு வச்சா திருமணம் தடைபட்டு போயிருமா?" – எடப்பாடி கமென்ட்!

தேர்தல் வாக்குறுதியில் அளித்தபடி விவசாயிகள் பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய...

கரூர்: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய வழக்கு; நியமன ரத்து உத்தரவுக்கு இடைக்கால தடை

கடந்த ஆண்டு செப்டம்பர் 27 அன்று கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்...