2
November, 2026

A News 365Times Venture

2
Monday
November, 2026

A News 365Times Venture

'10 கோடி நிலமோசடி… முதல்வருக்கு மனு' – தவெக வேட்பாளரை அடைத்து வைத்ததன் பின்னணி என்ன?

Date:

நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்காக முதல்வர் விஜய் இன்று புதுக்கோட்டை சென்றிருந்தார். அங்கே முதல்வரிடம் மனு கொடுக்க வந்திருந்த புதுக்கோட்டை தவெக வேட்பாளர் கே.எம்.சரீப்பை காவல்துறையினர் தடுத்து ஒரு அறையில் அடைத்து வைத்ததாக வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. சரீப் எதற்காக அடைத்து வைக்கப்பட்டார் என அவரையே தொடர்புகொண்டு பேசினோம்.

கே.எம்.சரீப்

கே.எம்.சரீப் கூறியதாவது, ”முதல்வரின் நிகழ்ச்சிக்காக காவல்துறை சார்பில்தான் வி.ஐ.பி பாஸ் கொடுத்தார்கள். மதியம் 12 மணிக்குதான் நிகழ்ச்சி. ஆயினும் சீக்கிரமாக செல்ல வேண்டும் என்பதற்காக காலை 9:45 மணிக்கே கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டேன்.

அங்கேயிருந்த வருவாய்த்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் என்னுடைய பாஸை பார்த்துவிட்டு உள்ளே அனுமதிக்கவில்லை. பயனாளிகளுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் எம்.பிக்களுக்கும் மட்டுமே அனுமதி எனக் கூறினார்கள். புதுக்கோட்டையில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான புறம்போக்கு நிலங்கள் தனியாருக்கு முறைகேடாக பட்டா போட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒரு சில அரசு அலுவலர்களை மட்டும் சஸ்பெண்ட் செய்து விஷயத்தை மூடி மறைத்துவிட்டனர். இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்த வேண்டுமென முதல்வருக்கு ஒரு மனுவை எழுதி வைத்திருந்தேன்.

சரீப்
சரீப்

அந்த மனுவை முதல்வரிடம் கொடுக்க வேண்டும் என்றேன். உடனே என்னையும் இன்னும் சிலரையும் கலெக்டர் அலுவலகத்தில் விழா நடந்த ஹாலுக்கு அருகேயே ஒரு அறைக்கு அழைத்து சென்றார்கள். கலெக்டரிடம் பேசிவிட்டு அழைத்து செல்கிறோம் எனக் காவல்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், எங்களை அந்த அறையிலேயே வைத்து பூட்டிவிட்டார்கள். முதல்வர் கிளம்பியவுடன் தான் அறைக்கதவை திறந்தனர். நான் புதுக்கோட்டை தொகுதியின் தவெக வேட்பாளர். சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்றேன். தவெகவுக்கு சங்கடம் விளைவிக்கும் வகையில் எதையும் செய்துவிடமாட்டேன். பொது பிரச்னைக்காகத்தான் முதல்வரை சந்தித்து மனு கொடுக்க நினைத்தேன். அதையும் அதிகாரிகள் தடுத்து விட்டார்கள். முன்னெச்சரிக்கையாக கைது செய்திருந்தால் கூட ஏற்றிருப்பேன். இப்படி கதவை மூடி அடைத்து வைத்ததை மனம் கேட்க மறுக்கிறது. வரும் நாட்களில் முதல்வரை எப்படியாவது சந்தித்து மனுவை கொடுக்க முயற்சிப்பேன்’ என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திமுக முன்னாள் MLA இராமச்சந்திரன் மரணம்: "அரசியல்வாதிகளுக்கு பாடமாக இருந்தார்" – பகிரும் நிர்வாகிகள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.இராமச்சந்திரன்...

`தரகுறைவான வார்த்தைகள் வந்திடும்; அதனால இந்த டாபிக் வேண்டாம்' – அதிமுகவில் இணைந்த வெள்ளதுரை பேட்டி

காவல்துறையில் `என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' எனப் பெயரெடுத்திருந்த, ஓய்வு பெற்ற காவல் துறை...

"பாசிசத்திற்கு அப்படி ஒரு ராஜவிசுவாசம்" – 'இந்தியா' கூட்டணி பேரணியில் பங்கேறாத தவெகவைச் சாடிய ஆ.ராசா

டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நேற்று நடந்த...

தேசிய நெடுஞ்சாலையில் தவெக அமைச்சரின் காரை மறித்த போராட்டக்காரர்கள்; பரபரப்புக்குள்ளான வேலூர்

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி அருகேயுள்ள நடப்பாறை பகுதியில், 1981-ம் ஆண்டு...