2
November, 2026

A News 365Times Venture

2
Monday
November, 2026

A News 365Times Venture

`தரகுறைவான வார்த்தைகள் வந்திடும்; அதனால இந்த டாபிக் வேண்டாம்' – அதிமுகவில் இணைந்த வெள்ளதுரை பேட்டி

Date:

காவல்துறையில் `என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ எனப் பெயரெடுத்திருந்த, ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி வெள்ளதுரை, எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ இ அதிமுகவில் இணைந்துள்ளார்.

2026 சட்டசபைத் தேர்தலில் சசிகலா பொதுச் செயலாளராக இருந்த அ.இ.பு.த.ம.மு.க சார்பாக நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தற்போது அதிமுகவில் சேர்ந்திருக்கும் அவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.

எம்.ஜி.ஆர்

“2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுக கலகலத்துக் கிடப்பதாக சிலர் பேசுகிறார்கள். இந்த நிலையில் அந்தக் கட்சியில் சேரும் முடிவை எடுத்திருக்கிறீர்களே?”

”அடிப்படையில் நான் எம்.ஜி.ஆர் ரசிகன். அவருடைய படங்கள். அவர் நடித்த படத்தின் பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிச்சு அவர் மேல ஒரு பற்றுதல் என் கல்லூரி காலத்துலயே உருவாகிடுச்சு. அதனால அப்பவே கட்சி உறுப்பினர் கார்டு வாங்கி வச்சிருந்தேன்.

பிறகு அரசுப் பணியில சேர்ந்துட்டதால அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அம்மா அந்த இயக்கத்தைக் கட்டுக்கோப்பாகவும், தமிழக மக்களுக்கு பிடிக்கிற விதத்துலயும் கொண்டு போனாங்க. அம்மா ஆட்சிக் காலத்துல அவங்க கையால நிறைய தடவை விருதுகளை வாங்கியிருக்கேன். ஆனா எந்த இடத்துலயும் நான் கட்சி ஆளா இருந்ததில்லை.

சட்டம் ஒழுங்குக்கு அவங்க கொடுக்கிற முன்னுரிமையும் முக்கியத்துவமும் ஒரு போலீஸ் அதிகாரியா எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.

பிறகு அவங்க தவறிய பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்த காலத்துலயும் சட்டம் ஒழுங்கு சீராகவே இருந்திச்சு.

பிறகு கட்சிக்குள் சில பிரச்னைகள், சலசலப்புகள். அது எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். சசகலா அம்மா இருந்த இடத்துக்குப் போனேன். இப்ப அங்க எனக்கு திருப்தி இல்லாததால் எம்.ஜி.ஆர் உருவாக்கி, அம்மா கட்டிக்காத்த இயக்கத்துக்கே வந்துட்டேன். அம்மாவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சியைப் பாதுகாத்து சரியான பாதையில கொண்டு போறார்னு நம்பறேன். அதனால சேர்ந்திருக்கேன்”

TVK Vijay
TVK Vijay

“முதல்வர் விஜய் அதிமுகவின் பெயரைக் கூடச் சொல்லாமல் ‘மற்றும் பலர்’ என்கிறாரே?”

”மற்றும் பலர்”னு சொல்றது சரி. அப்புறம் ஏன் எம்.ஜி.ஆர் தொப்பியைப் போட்டு ஓட்டு கேக்கணும். எம்.ஜி.ஆர்.க்கு உரிமை கோர இன்றைய முதல்வருக்கு என்ன தகுதி இருக்கு? புரட்சித் தலைவர் மலை, இவர் மடு. எம்.ஜி.ஆர். காங்கிரஸில் இருந்தார். திமுகவில் பொருளாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பை வகித்தார். அரசியல் கத்துகிட்டு வந்தார். அதனாலாயே மக்கள் அவர் இருந்த காலம் வரை அவரிடம் ஆட்சியைக் கொடுத்தார்கள்.

அவருடைய ஆட்சிக் காலத்துலயும் ஒவ்வொரு விஷயத்துலயும் மக்கள் நலன் இருந்திச்சு. ஆனா இன்றைய தவெகவில் முதல்வருக்கும் சரி, அமைச்சர்களுக்கும் சரி அரசியல்ல ஆனா ஆவன்னா கூட தெரியலை. மந்திரிகள் அடிப்படை அறிவு கூட இல்லாதவங்களா இருக்காங்க. ஒரு அமைச்சர் முழுக்கைச் சட்டைப் போட்டுகிட்டா டெங்குல இருந்து தப்பிச்சிடலாம்கிறார். இன்னொரு அமைச்சருக்கு சாயக் கழிவுக்கும் சோப்பு நுரைக்கும் வித்தியாசம் தெரியலை. இப்படியான அறிவிலிகளை வச்சுகிட்ட அதிமுகவைக் குறைச்சுப் பேசிட்டிருக்கீங்கன்னா சிரிப்புதான் வருது.

இந்தக் கட்சி சுதந்திரம் வாங்கியதுக்குப் பிறகு தமிழ்நாட்டை அதிக ஆண்டு ஆண்ட கட்சி. இந்தச் சாதனையை விஜய்யால் மட்டுமல்ல வேற எந்தவொரு கட்சியாலும் இப்போதைக்கு மிஞ்ச முடியாது. முதலமைச்சர் விஜய்க்கு நான் ஒரேயொரு கோரிக்கை வைக்குறேன். சினிமா பிம்பத்தால் ஆட்சிகு வந்துட்டீங்க. வந்த பிறகாச்சும் நீங்க முதல்வரா இருக்கிற மாநிலத்தின் கடந்த கால அரசியல் வரலாற்றைப் படிங்க”

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.!
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை.!

“காவல்துறையில் இருந்தீங்க. தவெக ஆட்சி அமைஞ்ச பிறகு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கு?”

”தேக்கம்பட்டி ஜெயில்ல இருந்து 17 கைதிகள் தப்பிச்சிருக்காங்க. தமிழ்நாட்டு வரலாற்றுல இவ்வளவு கைதி ஒரே சமயத்துல தப்பிச்சதா இதுவரை செய்தி இருந்ததில்லை. குழந்தைகள் காணாமப் போறது, கொலைகள்னு தினமும் செய்தி பார்க்குறப்ப சட்டம் ஒழுங்குன்னு ஒண்ணு இருக்கானுதான் கேக்கத் தோணுது.

‘சிங்கப் பெண்’ திட்டம் கொண்டு வந்தாரே, பெண்களுக்கெதிரா எங்காவது குற்றங்கள் நடந்தா அந்த இடத்துல இருந்து அலறியடிச்சு ஓடி போவது இந்த சிங்கப் பெண்களாத்தான் இருக்காங்க. காரணம், இந்த திட்டத்துக்கு தனி அதிகாரம் கிடையாது. இந்தப் படைக்குனு தனியா ஆள் எடுத்திருக்கலாம். ஆனா இருக்கிற காவலர்களுக்கே வேற யூனிஃபார்ம் கொடுத்து சிங்கப் பெண்ணாக்கிட்டாங்க.

ரிஸ்க் எடுக்கிறாங்கன்னா அவங்களூக்கு ஊக்கத்தொகையாச்சும் இருக்கணும். அதுவும் இல்ல. வழக்கமான சம்பளம்தான். பிறகு திட்டம் எப்படி உருப்படும்?”

Vijayabaskar, edappadi palanisamy

அ இ அதிமுகவிலிருந்து தவெகவுக்குச் சில எம்.எல்.ஏ.க்கள் சென்றது குறித்து..

“அ இ அதிமுகவை விரும்பி வாக்களித்த மக்களின் உணர்வைப் புரிஞ்சுக்காம இப்படிப் போனவங்களை விமர்சிக்கத் தொடங்கினா தரக்குறைவான வார்த்தைகள் எங்கிட்ட இருந்து வந்திடலாம். அதனால இந்த டாபிக்கை விட்டுடலாம்” என்று முடித்துக்கொண்டார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திமுக முன்னாள் MLA இராமச்சந்திரன் மரணம்: "அரசியல்வாதிகளுக்கு பாடமாக இருந்தார்" – பகிரும் நிர்வாகிகள்

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பின்னையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.இராமச்சந்திரன்...

"பாசிசத்திற்கு அப்படி ஒரு ராஜவிசுவாசம்" – 'இந்தியா' கூட்டணி பேரணியில் பங்கேறாத தவெகவைச் சாடிய ஆ.ராசா

டெல்லியில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நேற்று நடந்த...

'10 கோடி நிலமோசடி… முதல்வருக்கு மனு' – தவெக வேட்பாளரை அடைத்து வைத்ததன் பின்னணி என்ன?

நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்காக முதல்வர் விஜய் இன்று புதுக்கோட்டை சென்றிருந்தார். அங்கே...

தேசிய நெடுஞ்சாலையில் தவெக அமைச்சரின் காரை மறித்த போராட்டக்காரர்கள்; பரபரப்புக்குள்ளான வேலூர்

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி அருகேயுள்ள நடப்பாறை பகுதியில், 1981-ம் ஆண்டு...