17
November, 2026

A News 365Times Venture

17
Tuesday
November, 2026

A News 365Times Venture

`வேல்முருகனின் அரோகரா முழக்கம்: முதல்வரை ஒப்பிட்டு துதி பாட யார் அனுமதி வழங்கியது?' டிடிவி கண்டனம்

Date:

திருச்செந்தூர் கோயிலில் நேற்று (நவ.15) நடைபெற்ற சூரசம்ஹார விழாவின்போது, முருகப்பெருமானுடன் தமிழக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் அரோகரா முழக்கமிட்ட இயல் இசை நாடக மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அறங்காவலர் தேர்வுக்குழு உறுப்பினரும் பாடகருமான வேல்முருகன் ஆகியோரின் செயல் பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாடகர் வேல்முருகன்

அந்தவகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் பதிவில், ” தமிழ்க் கடவுளான முருகப்பெருமானை அவமதிக்கும் விதமாக, கடவுளுக்கு இணையாக முதலமைச்சரையும் அறநிலையத்துறை அமைச்சரையும் துதி பாடிய வர்ணனையாளர்கள் உணர்வுபூர்வமான இந்நிகழ்வில் பக்தர்களின் மனதை புண்படுத்திய வர்ணனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

முருகப்பெருமானின் வீரத்தையும் அருளையும் போற்றிப் பாட வேண்டிய புனிதமான இடத்தில், தங்களுக்குப் பதவி வழங்கிய ஆட்சியாளர்களிடம் விசுவாசத்தைக் காட்டுவதற்காக, கடவுளுக்கு இணையாகத் தமிழக முதலமைச்சரையும் அமைச்சரையும் ஒப்பிட்டுத் துதி பாடுவதற்கு இவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது? பதவி தந்த ஆட்சியாளர்களைத் திருப்திப்படுத்துவதற்காக முருகப்பெருமானின் புனிதத்தையும், லட்சக்கணக்கான பக்தர்களின் இறைநம்பிக்கையையும் பலிகொடுப்பதா?

சாதி, மதம், அரசியல் கட்சி, ஆட்சி அதிகாரம் ஆகிய அனைத்தையும் கடந்து நடைபெறும் புனிதமான நிகழ்வைத் தனிநபர் புகழ்ச்சிக்கும் அரசியல் ஆதாயத்திற்கும் பயன்படுத்தியிருப்பது, தாங்கள் படும் துன்பங்களிலிருந்து விடுபடக் கடுமையாக விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட வந்திருந்த பக்தர்களின் நம்பிக்கையை ஏளனப்படுத்தி, அவர்களை அவமதிக்கும் செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் விழா!

எனவே, திருக்கோயில்களின் ஆன்மிகப் புனிதத்தையும் வழிபாட்டு மரபுகளையும் பாதுகாக்கத் தவறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மீதும், சம்பந்தப்பட்ட வர்ணனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு இனிவரும் காலங்களில் இதுபோன்ற புனிதமான நிகழ்வுகளில் அரசியல் சார்ந்த தனிநபர் புகழ்ச்சிகளுக்கு எவ்விதத்திலும் இடமளிக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும் தவெக அரசையும் வலியுறுத்துகிறேன்” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுரை தனிஷிக் நகைக்கடையில் மீட்கப்பட்ட ரூ. 15 கோடி மதிப்புள்ள நகைகள்; காட்சிப்படுத்திய போலீஸ்| Photo

மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட 15 கோடி மதிப்புள்ள நகைகள் மீட்கபட்ட...

திருப்பத்தூர் பெரிய ஏரி: சுகாதாரச் சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; குப்பைகளை அகற்றிய நிர்வாகம்!

திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ளது திருப்பத்தூர் பெரிய ஏரி....

'மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியிலிருந்து நீக்க கோரிய பிரணாப் முகர்ஜி!' – என்ன சொல்கிறார் சோனியா?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி 'Belonging' என்ற பெயரில்...

திருப்பரங்குன்றம்: "தர்ஹாவை வழிபடுவது எல்லா இஸ்லாமியர்களுக்கும் மரபு அல்ல" – டாக்டர் கிருஷ்ணசாமி

"ஒரு தர்ஹாவைக் காரணம் காட்டி லட்சக்கணக்கான இந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பதும்,...