16
November, 2026

A News 365Times Venture

16
Monday
November, 2026

A News 365Times Venture

ஐ.நா: `மரண தண்டனைக்குத் தடை விதிக்கும் தீர்மானம்' – எதிராக வாக்களித்த இந்தியா

Date:

உலக நாடுகளில் மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட வரைவுத் தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில், ‘மரண தண்டனை பயன்பாட்டை நிறுத்தி வைத்தல்’ என்ற தலைப்பிலான இந்தத் தீர்மானத்தை மெக்சிகோ அறிமுகப்படுத்தியது. கடந்த வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) நடைபெற்ற வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 133 நாடுகளும், எதிராக 33 நாடுகளும் வாக்களித்தன.16 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. இதன் மூலம் பெரும்பான்மை ஆதரவுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் இந்தியாவோடு சேர்ந்து அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான், ஈரான், ஈராக், சவுதி அரேபியா, பஹ்ரைன், எகிப்து, குவைத், மாலத்தீவுகள், ஓமன் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.

ஐநா

மரண தண்டனை தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருவதற்கு இந்தத் தீர்மானம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. அதே சமயம், சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு தங்களுக்குரிய சட்ட அமைப்புகளை உருவாக்கவும், பொருத்தமான தண்டனைகளை நிர்ணயிக்கவும் அனைத்து நாடுகளுக்கும் உள்ள இறையாண்மை உரிமையை இத்தீர்மானம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், தண்டனை நிறைவேற்றுவதை அனைத்து நாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என இத்தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், ஏற்கனவே மரண தண்டனையை ஒழித்த நாடுகள் அதனை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
உலகளவில் மரண தண்டனைப் பயன்பாட்டைக் குறைக்கும் போக்கு நிலவி வந்தபோதிலும், 2025-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதற்குத் தீர்மானத்தில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றம் நிகழ்ந்த நேரத்தில் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதைத் துல்லியமாக உறுதி செய்ய முடியாதவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கக் கூடாது என இத்தீர்மானம் வலியுறுத்துகிறது.

UN

மேலும், கர்ப்பிணிப் பெண்கள், மனநலம் அல்லது அறிவுசார் குறைபாடு உள்ளவர்கள் மற்றும் முதியவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கட்டாய மரண தண்டனை முறையை நீக்குவதன் மூலம் மரண தண்டனை விதிக்கப்படும் குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றும் அனைத்து நாடுகளையும் ஐ.நா. பொதுச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

காவல் நிலையத்தில் `மிரட்டல்' தொனியில் ரீல்ஸ்; கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் வீடியோ சர்ச்சை!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் த.வெ.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளருமான வ.காந்திராஜ்...

`அமைச்சர் நிழ்ச்சியில் மின்தடை; அதற்கு திமுக தொழிற்சங்க அதிகாரிமீது நடவடிக்கையா?' – தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஷ்வரி பங்கேற்ற நிழ்ச்சியின் போது...

முதுமலையில் புலியை விரட்டிச் சென்ற சர்ச்சையும், அமைச்சர் வன்னிஅரசின் விளக்கமும்! என்ன நடந்தது?

சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். மசினகுடி,...