16
November, 2026

A News 365Times Venture

16
Monday
November, 2026

A News 365Times Venture

`அமைச்சர் நிழ்ச்சியில் மின்தடை; அதற்கு திமுக தொழிற்சங்க அதிகாரிமீது நடவடிக்கையா?' – தங்கம் தென்னரசு

Date:

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஷ்வரி பங்கேற்ற நிழ்ச்சியின் போது மின்தடை ஏற்பட்டதால், அதை காரணம் காட்டி இளமின் பொறியாளர் அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது எனவும் பணி நீக்க ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில்,

மின்தடை ஏற்பட்டதற்காக மின்வாரிய அதிகாரியை பழிவாங்கும் தவெக அரசின் அதிகார அத்துமீறல்! அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அரசு ஊழியர்களை பலிகடா ஆக்குவதா ?

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்பட்டதைக் காரணம் காட்டி, இளமின் பொறியாளர் திரு. அ. அண்ணாதுரை அவர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மின்வெட்டு

ஒரு அரசு நிகழ்ச்சியின்போது மின்தடை ஏற்படுவது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நிர்வாகப் பிரச்சினையாக இருக்கலாம். மின்தடை ஏற்படுவதற்கான காரணம் என்ன, அதற்குப் பொறுப்பானவர்கள் யார், தொழில்நுட்பக் கோளாறா, பணியாளர்களின் அலட்சியமா அல்லது அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் ‘மின்வெட்டா’ என்பதையெல்லாம் முறையாக விசாரித்து, உரிய நடவடிக்கை எடுப்பதுதான் ஒரு பொறுப்பான அரசின் அணுகுமுறையாக இருக்க வேண்டும். ஆனால், நிகழ்வின் உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்குப் பதிலாக, குறிப்பிட்ட ஒருவரை இலக்காகத் தேர்ந்தெடுத்து அவரைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது நியாயமற்றது.

குறிப்பாக, திரு. அண்ணாதுரை அவர்கள் தி.மு.கழகத்தின் தொழிற்சங்கமான தொமுசவைச் சேர்ந்தவர் என்பதற்காகவே அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஒரு அரசு ஊழியரின் பணித்திறன் மற்றும் பொறுப்பின் அடிப்படையில்தான் நடவடிக்கை இருக்க வேண்டுமே தவிர, அவர் எந்தத் தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர் என்பதை வைத்து அவரது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது.

அமைச்சர் ஜெகதீஸ்வரி
அமைச்சர் ஜெகதீஸ்வரி

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு தொடர்பாகப் பொதுமக்கள் பல்வேறு புகார்களைத் தெரிவித்து வரும் நிலையில், மின்சார விநியோகத்தைச் சீராகப் பராமரிப்பதற்கான நிர்வாக நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டிய தவெக அரசு, இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல், அவற்றைத் திசைதிருப்புவதற்காக இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.

எனவே, இளமின் பொறியாளர் திரு. அ. அண்ணாதுரை அவர்களைப் பணியிடை நீக்கம் செய்த ஆணையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மின்தடை ஏற்பட்டதற்கான உண்மையான காரணத்தை வெளிப்படையான விசாரணையின் மூலம் கண்டறிய வேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போக்கை உடனடியாகக் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

காவல் நிலையத்தில் `மிரட்டல்' தொனியில் ரீல்ஸ்; கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் வீடியோ சர்ச்சை!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் த.வெ.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளருமான வ.காந்திராஜ்...

முதுமலையில் புலியை விரட்டிச் சென்ற சர்ச்சையும், அமைச்சர் வன்னிஅரசின் விளக்கமும்! என்ன நடந்தது?

சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். மசினகுடி,...

விளையாடும்போது மாயமான மூன்று சிறுவர்கள்; ஏரியில் சடலங்களாக மீட்பு – கள்ளக்குறிச்சி அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகன்களான...

'ஒரு கம்யூனிஸ்ட்காரர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார்.!'- சு.வெங்கடேசனை விமர்சித்த நீதிபதி சுவாமிநாதன்

சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட...