26
May, 2026

A News 365Times Venture

26
Tuesday
May, 2026

A News 365Times Venture

வேலூர்: `மாமூல் கேட்டு மிரட்டியது உண்மைதான்’ – தவெக ஒன்றியச் செயலாளர் கட்சியில் இருந்து நீக்கம்!

Date:

வேலூர் மாவட்டம், கணியம்பாடி பகுதியில் செங்கல் சூளை நடத்தி வரும் உரிமையாளர்கள் சிலரை மிரட்டி மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டிருக்கிறார், தமிழக வெற்றிக் கழகத்தின் கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளரான விஜயகுமார். இது தொடர்பாக இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபடும் வீடியோ, அண்மையில் வெளியாகியிருந்தது.

த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் மீது வேலூர் தாலுகா காவல் நிலையத்திலும் செங்கல் சூளை உரிமையாளர்கள் புகாரளித்திருந்தனர். ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், போலீஸார் அவரிடம் எந்தவித விசாரணையும் நடத்தாமல் செங்கல் சூளை உரிமையாளர்களையே அழைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

த.வெ.க ஒன்றியச் செயலாளர் விஜயகுமார்

இதனால், கொந்தளித்துபோன அப்பகுதி மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் நேற்றைய தினம் கணியம்பாடி பேருந்து நிறுத்தப் பகுதியில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“மாதந்தோறும் ரூ.1 லட்சம் மாமூல் கேட்டு மிரட்டியதைத் தட்டிக்கேட்டதால், சூளைக்கு திருட்டு மண் கடத்தியதாக த.வெ.க ஒன்றியச் செயலாளர் சொல்வதைக் கேட்டு போலீஸார் செயல்படுகின்றனர். த.வெ.க ஒன்றியச் செயலாளர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என மக்கள் கொந்தளிப்போடு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், த.வெ.க-வில் இருந்து விஜயகுமார் நீக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக, ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளரான விஜய் மோகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “கணியம்பாடி கிழக்கு ஒன்றியச் செயலாளராக பதவி வகித்து வந்த விஜயகுமார் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால், அவர் வகித்து வந்த ஒன்றியச் செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் விடுவிக்கப்படுகிறார்.

நீக்க அறிவிப்பு

கழக தோழர்கள் கட்சி ரீதியாக அவருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் எனக் கேட்டு கொள்கிறோம்’’ எனக் கூறப்பட்டிருக்கிறது. த.வெ.க மாவட்டச் செயலாளர் தரப்பில் விசாரித்தபோது, “ஒன்றியச் செயலாளர் விஜயகுமார் மாமூல் கேட்டு மிரட்டியது உண்மை எனத் தெரியவந்ததையடுத்து, கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்’’ என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சென்னை மாநகராட்சியின் மே மாத கூட்டம் ரத்து? – பின்னணி என்ன?

சென்னை மாநகராட்சியின் மே மாதத்துக்கான மாமன்ற கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்...

CBSE: `நடப்பாண்டிலிருந்தே மூன்றாவது மொழி கட்டாயம் என்பது பெரும் அதிர்ச்சி' – அண்ணாமலை எதிர்ப்பு

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப்...

Abraham Accord: ஈரான் போர்; மத்திய கிழக்கிற்கு ட்ரம்ப் வைக்கும் செக்; 'நோ' சொன்ன பாக்., சவூதி பதில்?

"ஈரானுடன் ஒன்று அனைத்து தரப்பிற்கும் ஏற்ற சிறந்த ஒப்பந்தம் ஏற்படும்... இல்லையென்றால்...

"பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் SCAM; ஏமாற்றங்களுக்கு தயாரா இருக்கணுமா CM saar?" – உதயநிதி கேள்வி

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு...