25
June, 2026

A News 365Times Venture

25
Thursday
June, 2026

A News 365Times Venture

வெள்ளை அறிக்கை: "பணி நியமனம், பணி உயர்வு குறித்த விவரங்களை தவெக அரசு மறைப்பது ஏன்?"- செந்தில் பாலாஜி

Date:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உள்கட்டமைப்பு, நிதி, வருவாய், செலவினம் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று (ஜூன்.25) மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்து பேசியிருக்கிறார்.

EB வெள்ளை அறிக்கை

“பல தகவல்களை மறைத்து அவர்களுக்கு வசதியாக வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கட்டண உயர்வால் மட்டும் அல்ல, சீர்த்திருத்தங்கள் வாயிலாக வருவாயை அதிகரித்துள்ளோம்.

திமுக ஆட்சியில் மின் தேவை கணிசமாக அதிகரித்தது. சீரான மின் விநியோகத்துக்கு ஸ்டாலின் வித்திட்டார். வருவாய் பற்றாக்குறையை ரூ.34,000 கோடியாகக் குறைத்தோம்.

அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் வருவாய் பற்றாக்குறையைக் குறைத்தது திமுக அரசு. தவெக அரசு உள்நோக்கத்தோடு வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

ஆகஸ்டில் தேர்வு வைத்தோம். இப்போது அவர்கள் பணி ஆணையை வழங்கி இருக்கிறார்கள். திமுக ஆட்சியின் பணி நியமன ஆணையைத்தான் விஜய் தற்போது வழங்கினார்.

தேர்தல் வரவில்லை என்றால் நாங்களே பணி நியமன ஆணைகளை வழங்கியிருப்போம். நீங்கள் 40 நாள்களில் தேர்வு வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினீர்களா?

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

வெளிமாநிலங்களில் மின்சாரம் வாங்கியதால் செலவு ஏற்பட்டது. அதனை ஏன் வெள்ளை அறிக்கையில் சொல்லவில்லை.

5 ஆண்டுகளில் மின்சாரத்துறைக்காக எந்தத் திட்டமும் தொடங்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். ஆனால் திமுக ஆட்சியில் வட சென்னை அனல் மின்நிலையத்திட்டம்-3, உடன்குடி மின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

பணியாளர் பற்றாக்குறை என்கின்றனர். இப்போது இருக்கும் ஊழியர்களை வைத்துதான் சீரான மின்சாரம் தந்தோம். திமுக ஆட்சியிலும் இதே பணியாளர்கள்தான் இருந்தார்கள்.

பணி நியமனம், பணி உயர்வு விவரத்தை தவெக அரசு மறைப்பது ஏன்? பணி நியமன ஆணையிலும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'டாஸ்மாக்-கிற்கு வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?' – அமைச்சர் விக்னேஷின் பதில் என்ன?

​திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொது மக்கள்...

அமலுக்கு வரும் பாஸ்போர்ட் திருத்தச் சட்டம்; ஏறும் பாஸ்போர்ட் கட்டணம்; எவ்வளவு, எப்போது முதல்?

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் 'பாஸ்போர்ட் திருத்தச் சட்டம், 2026'-ஐ கொண்டு...

வெனிசுலாவை உலுக்கிய இரட்டை பூகம்பம்; இடிந்து விழுந்த கட்டடங்கள்… கதறி அழும் மக்கள் | Photo Album

Venezuela Earthquakes: நிலநடுக்கத்தை போன் மூலம் முன்கூட்டியே அறியலாமா? கூகுள் தரும்...

'மீண்டும் பழையபடி வணிக சிலிண்டர்கள் கிடைக்கும்' – கட்டுப்பாடுகளைத் தளர்த்திய மத்திய அரசு

ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எல்.பி.ஜி பற்றாக்குறை ஏற்பட்டது. இதையொட்டி, கடந்த...