26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

'மீண்டும் பழையபடி வணிக சிலிண்டர்கள் கிடைக்கும்' – கட்டுப்பாடுகளைத் தளர்த்திய மத்திய அரசு

Date:

ஈரான் போர் காரணமாக, இந்தியாவில் எல்.பி.ஜி பற்றாக்குறை ஏற்பட்டது. இதையொட்டி, கடந்த மார்ச் மாதம், வணிக சிலிண்டர்களுக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு.

அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அறிக்கை கூறும் முக்கிய புள்ளிகள்…

> வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தில் இருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அரசு நீக்கியுள்ளது.

சிலிண்டர்

> தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘பல்க் எல்பிஜி’ (Bulk LPG) விநியோகம், இப்போது நெருக்கடிக்கு முந்தைய நுகர்வு அளவில் 50% வரை தளர்த்தப்பட்டுள்ளது.

இது வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்குப் பெரியளவில் கைகொடுக்கும்.

> மேற்கு ஆசிய நெருக்கடியின்போது, உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மத்திய அரசு அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் (Essential Commodities Act) கீழ் ஓர் உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

அதன்படி, பெட்ரோகெமிக்கல் மற்றும் இதர பயன்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்த C3-C4 ரசாயனக் கலவைகளை (C3-C4 streams), எல்பிஜி உற்பத்திக்காக மட்டுமே பிரத்யேகமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மடைமாற்றம் செய்யப்பட்டது.

தற்போது, உள்நாட்டு எல்பிஜி உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் இறக்குமதி செய்யப்படவுள்ள எல்பிஜி சரக்குகளின் வரத்தைக் கணக்கில் கொண்டு, எல்பிஜி உற்பத்திக்கு மாற்றப்படும் C3/C4 கலவைகளின் அளவைக் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'அது போதைப்பொருள் இல்லங்க; குழந்தையோட மாத்திரை!' – விளக்கும் தவெக அமைச்சர் சரத்!

தவெக அரசின் மனிதவளத்துறை அமைச்சரான சரத் போதைப் பொருள் பயன்படுத்துவதை போன்ற...

`கன்ஃபெஷன் ரூம் டு கன்சல்டன்ட் ரூம்' – அறிவாலயத்தில் பிக்பாஸ் சாஷோ?!

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் அதிரி புதிரி அரசியலுக்குத் திமுக...

“திமுக-வை பாஜக பக்கம் இழுத்துச் செல்கிறார் ஆ.ராசா’’ – அமைச்சர் வன்னி அரசு சூசகம்!

ராணிப்பேட்டையில் இன்று, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்....

நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அரசு தொடக்கப் பள்ளிகள்! – அதிகாரிகள் சொல்வதென்ன?

பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல்...