24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

வீரமணி போக்சோ வழக்கு: “குற்றவாளிகள் எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும்…" – எடப்பாடி பழனிசாமி காட்டம்

Date:

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கு குறித்து காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.

இதுபோன்ற Sensitive-ஆன, பல ஆண்டுகள் வெளி உலகிற்குத் தெரியாமல் இருந்த ஒரு விஷயம், தற்போது பொதுவெளியில் வந்திருக்கும்போது, காவல்துறை இந்த வழக்கை எந்தவித Pressure-ம் இன்றி கையாள வேண்டும்.

தொழிலதிபர் வீரமணி

தற்போது, தொடர்ந்து பல்வேறு ஆதாரங்கள், சாட்சியங்கள் காவல்துறை விசாரணையின் ஊடாக இந்த வழக்கில் சிக்கி உள்ளதாக செய்திகளில் வந்துள்ளன. பெண்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் குற்றங்களை அதற்குரிய தன்மையோடு அணுக வேண்டும் என்பதை அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பெண்களுக்கு எதிரான இந்தப் பாலியல் குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அது எவ்வளவு “பெரிய இடமாக” இருந்தாலும், இந்தச் சுதந்திர சமூகத்தில் எந்த ஒரு இடமும் அளிக்கக் கூடாது. இந்த வழக்கில் யாருக்குத் தொடர்பு இருந்தாலும், இதனை மறைக்க துணை நின்றது எவ்வளவு பெரிய அதிகாரமாக இருந்தாலும், அனைவர் மீதும் பாரபட்சம் இன்றி அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஜெம்' வீரமணி: `சாந்தி, ரஞ்சன்… ரூ.20 கோடியை மிரட்டி வாங்க என்னை அணுகினர்' – ஜான் பாண்டியன் பேட்டி

'ஜெம்' வீரமணி பாலியல் விவகாரத்தில், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன....

“தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும்!’’ – திருமாவளவன்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று மாலை செய்தியாளர்களைச்...

வீரமணி வழக்கு: `யாரையும் காப்பாற்ற எந்த உத்தரவும் கழக ஆட்சியில் பிறப்பிக்கப்படவில்லை' – ஸ்டாலின்

வீரமணி போக்சோ வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள், அவரைக் காப்பாற்ற முயன்றவர்கள்...

தேர்தல் ஆணையம் விவகாரம்: “ஞானேஷ்குமார் அப்ரூவராக மாற வேண்டும்" – ராகுல் காந்தி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக தனது பதவியை ராஜினாமா...