25
September, 2026

A News 365Times Venture

25
Friday
September, 2026

A News 365Times Venture

'ஜெம்' வீரமணி: `சாந்தி, ரஞ்சன்… ரூ.20 கோடியை மிரட்டி வாங்க என்னை அணுகினர்' – ஜான் பாண்டியன் பேட்டி

Date:

‘ஜெம்’ வீரமணி பாலியல் விவகாரத்தில், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து கடந்த 2024-ம் ஆண்டே தமிழக காவல்துறையில் புகார் தெரிவித்ததாகக் கூறி அதிர்ச்சி கிளப்பினார் தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார்.

மேலும், இந்த விவகாரத்தில் ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழக’த்தின் தலைவர் ஜான் பாண்டியனும் பஞ்சாயத்து செய்ததாக திடுக்கிடும் தகவல்களைக் கூறியிருந்தார்.

இதுகுறித்து ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழக’ தலைவர் ஜான் பாண்டியனிடம் விளக்கம் கேட்டுப் பேசியபோது….

“இந்த விவகாரத்தில், ‘புதிய தமிழகம் கட்சி’யினர் என் மீது குறிவைத்து அவதூறு பரப்பி வருகிறார்கள். ஏதோ பக்கத்தில் இருந்து எல்லாவற்றையும் பார்த்ததுபோல், யூ ட்யூபிலும் ஒருவர் பேசிக்கொண்டிருக்கிறார். ஏதேதோ சொல்லி வசூல் பண்ணுவதற்காக இவர்கள் எல்லாம் இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன். எனக்கு எதுவுமே புரியவில்லை.”

“ஜெம் வீரமணி பாலியல் விவகாரத்தில், நீங்கள் சாந்தி தரப்பை மிரட்டி பஞ்சாயத்து செய்ததாக காங். நிர்வாகி ரஞ்சன் குமார் கூறியிருக்கிறாரே?”

“நான் யாரையும் மிரட்டவில்லை. இரண்டரை வருடங்களுக்கு முன்பு, ‘ஒரு குடும்ப பிரச்னை சம்பந்தமாக உங்களிடம் பேசவேண்டும்’ என என் வீட்டிற்கே வந்து ரஞ்சன் குமார் என்னைச் சந்தித்தார். உடனே ‘குடும்ப பிரச்னை என்றால் பொது இடத்தில் வைத்துப் பேசலாம்’ என தாஜ் ஹோட்டலில் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அப்போது ‘சாந்திக்கும் ஜெம் வீரமணிக்கும் இடையே நீண்ட நாள் தொடர்பு இருந்தது. ஆனால், இப்போது சாந்தியைத் துரத்தி விட்டுவிட்டார். எனவே அவரிடம் பேசி, 20 கோடி ரூபாய் வாங்கிக் கொடுங்கள்’ என்றனர்.

ரஞ்சன் குமார்

இப்படி என்னிடம் வருவதற்கு முன்பே, சாந்தியும் ரஞ்சன் குமாரும் ஜெம் வீரமணியிடமிருந்து 5, 6 கோடி ரூபாயை மிரட்டி வாங்கியிருக்கிறார்கள் என்ற விஷயத்தையும் அப்போதுதான் நான் தெரிந்துகொண்டேன். மேலும் 20 கோடி ரூபாயை மிரட்டி வாங்குவதற்காகத்தான் என்னை அணுகியிருந்தனர். உடனே ‘இதுபோன்ற விஷயங்களுக்கெல்லாம் தயவுசெய்து என்னை அணுகாதீர்கள்’ எனக்கூறி பேச்சுவார்த்தையை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டேன்.”

“அப்படியென்றால், ஜெம் வீரமணியின் சிறார் பாலியல் விவகாரம் தொடர்பான வீடியோ குறித்தெல்லாம் உங்களுக்கு எதுவுமே தெரியாதா?”

“இப்போதுதான் வீடியோ விவகாரமெல்லாம் இவர்களாக புதிதாக க்ரியேட் பண்ணுகிறார்கள். எனக்கு அதுகுறித்தெல்லாம் எதுவும் தெரியாது. ஏற்கெனவே சாந்திக்கும் ரஞ்சன் குமாருக்கும் இடையேதான் பழக்கம் இருந்திருக்கிறது. இதுகுறித்து ரஞ்சன் குமாருமே சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது இந்த விவகாரத்தின் இடையே வந்த என் மீது அவர் எப்படி குற்றம் சாட்டுகிறார்?

எனக்கும் இந்த விவகாரத்துக்கும் உள்ள நேரடியான சம்பந்தம் என்னவென்று ஒரு சின்ன ஆதாரமாவது இவர்களிடம் இருக்கிறதா? சாந்தி தரப்பை நான் மிரட்டியதாக இப்போது சொல்கிறார்கள். அப்படி நான் மிரட்டியிருந்தால், மிரட்டிய என்னையே திரும்பவும் ஏன் பார்க்க வந்தார்கள்? அல்லது மிரட்டல் குறித்து அப்போதே இவர்கள் போலீஸில் புகார் தெரிவித்திருக்கலாமே… அப்படி எந்தப் புகாரும் இருக்கிறதா?”

தொழிலதிபர் வீரமணி
தொழிலதிபர் வீரமணி

“ஆனால், ‘சாந்தியும் ஜான் பாண்டியனும் பேச்சுவார்த்தை நடத்தியபோதுதான், ‘ஜெம் வீரமணியின் பாலியல் அத்துமீறல் விவகாரம் குறித்தெல்லாம் எனக்குத் தெரியவந்தது’ என்றல்லவா ரஞ்சன் குமார் கூறுகிறாரே?”

“ரஞ்சன் குமார்தான் முதலில் என்னை வீட்டில் வந்து சந்தித்தார். பின்னர் தாஜ் ஹோட்டல் சந்திப்பின்போதும், சாந்தியை அழைத்துவந்தவர், ‘எனக்கு ரொம்ப வேண்டியவங்க… ஒரு 20 கோடி ரூபாய் பேசி வாங்கிக்கொடுங்க’ என்கிறார். ‘நான் இதுபோன்ற விஷயங்களில் எல்லாம் தலையிடுவதில்லை’ எனக்கூறி பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு வெளியேறிவிட்டேன். இதுதான் நடந்த உண்மை.”

“அப்படியென்றால், உங்கள் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கிறார்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் மீது நீங்கள் போலீஸில் புகார் கொடுப்பீர்களா?”

“நமக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையே என்றுதான் நான் இந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், ‘எங்கள் தலைவர் பெயரை பொதுவெளியில் அசிங்கப்படுத்துகிறார்கள். எனவே இதுகுறித்து விசாரித்து அவதூறு கிளப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக்கூறி எங்கள் கட்சியைச் சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் இப்போது மாவட்டம்தோறும் சைபர் கிரைமில் புகார் கொடுத்து வருகிறார்கள். இனி போலீஸ்தான் இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எனக்கு சித்தப்பாவே இல்லை; மதுரை மன்னராக கற்பனை செய்துகொள்ளும் நிர்மல் குமார்..!" – பி.டி.ஆர் பதில்

நேற்று செய்தியாளர் சந்திப்பில் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார், “மதுரை...

"ஒரு நாள் ஈரான் மக்கள் சுதந்திர காற்றை.!" – ஐ.நாவில் நெதன்யாகு பேச தொடங்கியதும் வெளியேறிய நாடுகள்

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.அதில் பல்வேறு நாட்டு...