29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

வீரமணி போக்சோ வழக்கு: “எனக்கும் வீரமணிக்கும் தொடர்பா?" – அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்!

Date:

ஜெம் நிறுவனர் வீரமணி வழக்கு தமிழ்நாட்டில் விவாதமாகியிருக்கிறது. ஏற்கெனவே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் விசாரணையில் இருக்கும் அவர் மீது, நேற்று மற்றொரு புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆளும், தவெக அரசும், எதிர்க்கட்சியான திமுக-வும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், இடைத்தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி, “ஜெம் வீரமணி மீது புகார்கள் எழுந்தும் கடந்த இரண்டரை மாதங்களாக தமிழ்நாடு அரசு அவரைப் பாதுகாத்து காப்பாற்றி வருகிறது. வீரமணியும் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வனும் நெருங்கிய குடும்ப நண்பர்கள். இதை அவரே பேசியிருக்கிறார். அந்த நட்பின் காரணமாகவே அரசு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்து வருகிறது.” என விமர்சித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி

இதற்கு முன்னர் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, “முதலமைச்சரின் நண்பர்கள் ஆன ஆந்திர ரெட்டி கேங்க் நடத்தும் கனிம நிறுவனங்களிடம், ஜெம் வீரமணியின் கனிம நிறுவனங்களை அபகரித்துக் கொடுக்க நடைபெற்றதாக கூறப்படும் முயற்சிகளை இல்லை என்று மறுக்க முடியுமா CM Sir…? உங்கள் மடியில் கனமில்லை என்றால் ஜெம் வீரமணியுடன் தொடர்பில் இருந்த இரண்டு அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவரை பதவி நீக்கம் செய்துவிட்டு அவர்களை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த தயாரா CM Sir..?” எனக் குறிப்பிட்டிருந்தார். அதனால் இந்த விவகாரம் விவாத களத்துக்கு வந்தது.

இந்த நிலையில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் நடைபெற்ற தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் தொடக்க நிகழ்ச்சியில், வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் த.லோகேஷ் தமிழ்செல்வன் கலந்துகொண்டார். அப்போது இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், “எடப்பாடி பழனிசாமியின் கருத்துகளை முற்றிலும் தவறானது.

லோகேஷ் தமிழ்ச்செல்வன்
லோகேஷ் தமிழ்ச்செல்வன்

நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, மேடை நாகரிகத்திற்காகப் பேசிய வார்த்தைகளை அடிப்படையாக வைத்து எடப்பாடி பழனிசாமி தேவையற்ற அரசியலை செய்து வருகிறார். மேடை மரியாதையை ஒரு பெரிய குற்றச்சாட்டாக மாற்ற முயற்சிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, பழக்கமா இல்லையா என்பதை ஆராய்ந்து பாருங்கள் உண்மை புரியும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

’சாதிய வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது’–அமைச்சர் வன்னிஅரசு எச்சரிக்கை

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஒடையகுளம் பேரூராட்சி கவுன்சிலர் விஜயவாணியின்...

`'மாமா' என்று நீ அழைத்த நபர் உனக்கு மிக மோசமான செயலைச் செய்தார்; ஆனால் நீ..!' – நெகிழ வைத்த தீர்ப்பு

டெல்லியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த 2023ம் ஆண்டு பாலியல்...

முதல்வர் விஜய் மதுரை விசிட் : ரோடு ஷோ ஆல்பம்!

முதல்வர் களைகட்டிய ரோடு ஷோ முதல்வர் களைகட்டிய ரோடு ஷோ Source link

“பணம், பதவிக்கு ஆசைப்பட்டு தவறான வழியில் செல்லாதவர் ரஜினிகாந்த்’’ – வேலூர் ரசிகர் மன்றம் பெருமிதம்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் `அன்புத்...