16
July, 2026

A News 365Times Venture

16
Thursday
July, 2026

A News 365Times Venture

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு செக்: இந்தியா, சீனாவிற்கு 100% வரி? – அமெரிக்காவின் புதிய மசோதா!

Date:

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் ஐந்து நாடுகள் மீது 100 சதவிகித வரி விதிக்கும் புதிய மசோதா ஒன்று அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை கொண்டு வந்தது அமெரிக்காவின் இரு கட்சி ஆதரவு கொண்ட செனட் உறுப்பினர்கள் குழு ஆகும்.

இந்த மசோதா சமீபத்தில் மறைந்த குடியரசுக் கட்சி செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் முன்னெடுத்த மசோதா ஆகும்.

எந்தெந்த நாடுகள்?

இந்தியா, சீனா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, அஜர்பைஜன் ஆகிய நாடுகள் தான் அந்த ஐந்து நாடுகள்.

கச்சா எண்ணெய்

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தப் புதிய மசோதா மூலம் இந்த நாடுகளுக்கு 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும்.

முன்பு, இது 500 சதவிகித வரியாக முன்னெடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிலருக்கு விலக்கு…

ஆனால், இந்த மசோதாவின் கீழ், ரஷ்யாவிடமிருந்து எரிவாயு வாங்கும் 15 ஐரோப்பிய நாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமாக, அந்த ஐரோப்ப நாடுகள் ரஷ்யாவை சார்ந்திருப்பதை படிப்படியாகக் குறைத்து வருகின்றன என்றும், அவர்கள் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்வது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது.

ஏன் இந்த நடவடிக்கை?

இந்த மசோதா வெறும் வரி விதிப்பு மசோதா மட்டுமல்ல. இது ரஷ்யாவின் எரிசக்தி, நிதித் துறை, பாதுகாப்புத் துறை, ரஷ்ய அதிபர் புதினுக்கு கொடுக்கும் வணிக நெருக்கடி.

ரஷ்யாவிடம் இருந்து ஏதேனும் பொருள் இறக்குமதி செய்யப்படுவது ரஷ்யாவின் போருக்கு உதவி செய்வதாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு கெடுபிடி விதிக்க தான் அமெரிக்கா இந்த நடவடிக்கையை முன்னெடுக்கிறது.

இந்த மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வரவேற்பும் மிகப்பெரியதாக இருக்கிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பழனி கோயில் நில முறைகேடு: "ஊழலுக்குப் பின்னாலுள்ள அந்த Powercenter யார்?" – முதல்வருக்கு EPS கேள்வி

பழனி தண்டாயுதபாணி கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனியார் பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதற்கு அதிமுக...

சபரி வர்மன் லாக்கப் கொலை: "சிலரைக் காப்பாற்றுவதற்காக கைதிகள் மீது வழக்கு" – கனிமொழி குற்றச்சாட்டு

நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வியாபாரி சபரி வர்மன் சிறை காவலர்களால்...

SIR: “வாக்காளர் திருத்தப் பணியில் ‘மத’ அரசியல்?"- கடிதம் எழுதிய ஐ.நா; விளக்கமளித்த தேர்தல் ஆணையம்!

ஐ.நா கடிதம்கடந்த ஆண்டு பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்...