3
June, 2026

A News 365Times Venture

3
Wednesday
June, 2026

A News 365Times Venture

`முன்னுரிமை அடிப்படையில் குற்றங்களை கட்டுப்படுத்த..!'- புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்

Date:

தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி-யாக (DGP) மகேஷ் குமார் அகர்வால் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டவுடன் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “எனக்கு இந்த உயரிய வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு மக்களுக்குச் சேவை செய்வதற்கான இந்த வாய்ப்பை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவேன். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதே காவல்துறையின் முதன்மை நோக்கமாக இருக்கும். குறிப்பாக, தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தைக் முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

மகேஷ் குமார் அகர்வால் – முதல்வர் விஜய்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு காவல்துறை சமரசமின்றிச் செயல்படும். அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதே இந்தத் துறையின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக இருக்கும். வளர்ந்து வரும் தொழில்நுட்பக் காலத்தில் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள சைபர் குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்துத் தீவிர நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும். தமிழ்நாடு காவல்துறையின் இந்த அதிரடி முயற்சிகள் அனைத்தும் முழுமையாக வெற்றிபெற வேண்டும் என்றால், அதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். காவல்துறையின் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்களும், ஊடகவியலாளர்களும் தங்களின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உருவான இரண்டாம் அணி; மம்தாவுக்கு பெர்சனல் Loss; வேடிக்கை பார்க்கும் பாஜக- சிவசேனா ஆகிறதா திரிணாமுல்?

2011-ம் ஆண்டு முதல் மேற்கு வங்கத்தின் ஆட்சியில் பறந்த திரிணாமுல் காங்கிரஸின்...

கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்: முதல்வர் விஜய் முதல் ராகுல் காந்தி வரை… நினைவுகூர்ந்த தலைவர்கள்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 103 வது பிறந்தநாள் விழா இன்று (03-06-26)...

டெல்லி: உணவகத்தில் தீ விபத்து; 20 பேர் உயிரிழப்பு; பின்னணி என்ன?

டெல்லி மாளவியா நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்...

டெல்லி கொடுத்த முக்கியத்துவம்! பாஜகவில் நீடிப்பாரா அண்ணாமலை? – தொடரும் இழுபறி!

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் நீடிப்பாரா அல்லது விலகுவாரா...