26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' – வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

Date:

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கலந்துகொண்டு தலைமைதாங்கினர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே செய்தியாளர்களிடம் பேசினார்.

மோகன் பகவத்

அப்போது, ,“இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிரான ஒருவரை நாம் சின்னமாக்கப் போகிறோமா? படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல். சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஔரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷிகோவை விட ஔரங்கசீப்தான் ஒரு அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்பட்டால், அது ஒரு சுதந்திரப் போராட்டம். அவர்களுக்கு முன் இருந்தவர்களுக்கு எதிரான போராட்டமும் ஒரு சுதந்திர இயக்கமாகும். இது மதத்தைப் பற்றிய முடிவல்ல. ஆர்.எஸ்.எஸ்-ஸின் உறுதியான பார்வையும் இதுதான். வக்ஃப்பிற்காக அரசு ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது. இதுவரை அரசின் செயல்பாடுகள் சரியாகத்தான் செல்கிறது. இதற்குப் பிறகு அவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.” என்றார்.

Dattatreya Hosabale

இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே சமூக வலைதளங்களில் கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டது தொடர்பான விவாதம் நடந்துவருகிறது. இந்த நிகழ்வில் வைக்கப்பட்ட பதாகைகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருந்தது. கன்னடப் பலகைகள் இல்லாதது சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளைத் ஏற்படுத்தியிருக்கிறது. மாநில மொழிகளைப் புறக்கணித்து இந்தியை ஆர்.எஸ்.எஸ் ஊக்குவிப்பதாகக் கண்டித்துள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கன்ஃபெஷன் ரூம் டு கன்சல்டன்ட் ரூம்' – அறிவாலயத்தில் பிக்பாஸ் சாஷோ?!

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியிலிருந்து மீண்டு, மீண்டும் அதிரி புதிரி அரசியலுக்குத் திமுக...

“திமுக-வை பாஜக பக்கம் இழுத்துச் செல்கிறார் ஆ.ராசா’’ – அமைச்சர் வன்னி அரசு சூசகம்!

ராணிப்பேட்டையில் இன்று, சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு செய்தியாளர்களைச் சந்தித்தார்....

நீலகிரி: ஒற்றை மாணவர் சேர்க்கைகூட நடைபெறாத அரசு தொடக்கப் பள்ளிகள்! – அதிகாரிகள் சொல்வதென்ன?

பழங்குடிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த மலை மாவட்டமான நீலகிரியில், முதல்...

`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள்; செயல்பாடுகளில் மர்மம்; CBCID விசாரணை வேண்டும்' – பெ.சண்முகம் அறிக்கை

`ஈஷாவில் அடுத்தடுத்து மரணங்கள் நடக்கிறது. இது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை வேண்டும்'...