29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

`மனசு பதறுகிறது; காவல்துறைக்குப் பாடம் புகட்டுவோம்' – அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையில் நீதிபதி!

Date:

திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாகப் பணிபுரிந்த அஜித்குமாரை, கடந்த 2025 ஜூன் 27ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர். அதில் ஜூன் 28ஆம் தேதி அவர் கொலைசெய்யப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் தனிப்படைக் காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி மதுரை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு, நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஐ தரப்பில், “அஜித்குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

அதையடுத்து நீதிபதி நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு சிபிஐ தரப்பில், “அது உண்மை இல்லை. அறிக்கையே தயாராகி வருகிறது.” என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதி, “ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு ஒருவரை அடித்துக் கொலை செய்துவிட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்?” எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும், “இதற்கு என்ன காரணம்? முன்விரோதம் ஏதும் இருந்ததா?” எனக் கேள்வி எழுப்பினார்.

அஜித்குமார் மரண வழக்கு
அஜித்குமார் மரண வழக்கு

“முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நிகழ்ந்துள்ளது” என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதி, “யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனசு பதறுகிறது. ஒன்றுமில்லா விஷயத்திற்கு ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல்துறையினருக்குப் பாடம் புகட்டுவோம்” எனக் குறிப்பிட்டு வழக்கை பிப்ரவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை! – விவரம் என்ன?

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து...

ஜெம் வீரமணி விவகாரம்: "எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளார்" – பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச்...

தாராபுரத்தில் நாளை விஜய் தேர்தல் பிரசாரம்; பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரம் | Photo Album

முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ - ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு...

புதுச்சேரி: காவல்துறை SP மீது பாலியல் வன்கொடுமை வழக்கு; நீதிமன்றத்தின் கண்டிப்பால் பணிந்த அரசு

புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியன். பதவி...