29
September, 2026

A News 365Times Venture

29
Tuesday
September, 2026

A News 365Times Venture

திருநெல்வேலி: மூடிக் கிடக்கும் ஆதிதிராவிடர் சமுதாயக்கூடம்; சீரமைத்துத் திறக்கப்படுமா?!

Date:

திருநெல்வேலி சந்திப்பு அருகிலிருக்கும் இரட்டைப் பாலத்திற்குக் கீழே ஆதிதிராவிடர் சமுதாய நலக்கூடம் இருக்கிறது. இந்த சமுதாய நலக்கூடமானது அதற்கு முன்னிருக்கும் கல்வெட்டு தகவலின்படி ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் 7.4.2002இல் திறக்கப்பட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சமுதாயக்கூடம் தாலுகா அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. பிறகு நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் புதர் மண்டிக் கிடக்கிறது. மிகப்பெரும் பொருட் செலவில் கட்டப்பட்ட இந்த சமுதாயக் கூடம் இப்போது பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது.

இது குறித்து அங்கிருக்கும் கடைவீதி மக்களிடம் கேட்கும்போது,

“இந்த சமுதாயக் கூடமானது நீண்ட காலமாகத் திறக்கப்படாமல் இருக்கிறது. முன்பு இக்கூடமானது தாலுகா அலுவலகமாகவும், விடுதியாகவும் பயன்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது இது பயன்பாட்டில் இல்லாமல் ஒரு விதமான அசோகரியத்தையும் இங்கு ஏற்படுத்துகிறது.

அடிக்கடி இந்த இடத்தை சுத்தம் செய்வார்கள். ஆனால் மீண்டும் மீண்டும் பாழடைந்த இடமாகவே மாறிவிடும். எனவே இந்த சமுதாய நலக்கூடத்தை அரசு சீரமைத்து, சுத்தப்படுத்தி ஏதேனும் ஒரு வகையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்” என்று மக்கள் கூறினர்.

மேலும் இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் கேட்டபோது, “ஆதிதிராவிடர் நலக்கூடம் மிகவும் பழுதடைந்துள்ளது. எனவே அதை பராமரிக்கவும் மறுசீரமைப்பு செய்யவும் ADWஇடம் நிதி கேட்டிருக்கிறோம். நிதி வந்த பிறகு நாங்கள் TAHDCO மூலமாக கண்டிப்பாக திருநெல்வேலி சந்திப்பு ஆதிதிராவிடர் சமுதாயக்கூடத்தை மறுசீரமைப்பு செய்திடுவோம்” என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

புதுச்சேரி: புழுக்களுடன் அழுகிய நிலையில் 50 கிலோ இறைச்சி; துணை ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த உணவகம்

புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டு வரும் சில ஹோட்டல்களில், இறைச்சிகளைப் பல நாட்கள்...

சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறைத் தண்டனை! – விவரம் என்ன?

பிரபல யூடியூபரான சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து...

ஜெம் வீரமணி விவகாரம்: "எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளார்" – பொன்.ராதாகிருஷ்ணன்

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச்...

தாராபுரத்தில் நாளை விஜய் தேர்தல் பிரசாரம்; பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரம் | Photo Album

முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ - ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு...