9
September, 2026

A News 365Times Venture

9
Wednesday
September, 2026

A News 365Times Venture

போர் நிதி: `ஆபாசப் படங்களுக்கு அரசு அங்கீகாரம்' – உக்ரைன் எடுத்திருக்கும் முடிவின் பின்னணி என்ன?

Date:

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான நிதியைத் திரட்ட, உக்ரைன் நாடு ஆபாசப் பட தயாரிப்பை சட்டப்பூர்வமாக்கும் புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரிப்பது மற்றும் விநியோகிப்பது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். எனினும், போர்ச்சூழலால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வரி வசூல் அமைப்புகள் இத்துறையின் மீது கவனம் செலுத்தத் தொடங்கின.

இதனால், படைப்பாளர்கள் வருமானத்தைக் காட்டினால் குற்றவியல் வழக்கையும், காட்டாவிட்டால் வரி ஏய்ப்பு வழக்கையும் எதிர்கொள்ளும் விசித்திரமான சூழல் உருவானது.

ரஷ்யா – உக்ரைன் போர்

‘ஓன்லிஃபேன்ஸ்’ தளத்தின் படைப்பாளரான ஸ்விட்லானா ட்வோர்னிகோவா போன்றவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி, லேப்டாப் மற்றும் பணத்தைப் பறிமுதல் செய்த காவல்துறை, லஞ்சம் கேட்ட சம்பவங்களும், மிரட்டல்களால் பலர் நாட்டை விட்டு வெளியேறிய நிகழ்வுகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

‘ஓன்லிஃபேன்ஸ்’ தளத்தில் 2023-ல் மட்டும் 7,900 உக்ரைனியர்கள் 131 மில்லியன் டாலருக்கும் அதிகமாக ஈட்டியுள்ளனர். இந்தப் பெருந்தொகை ஊழலின் பிடியில் இயங்கி வந்த நிலையில், அதிகாரிகளின் லஞ்ச வேட்டையை அரசு வழக்கறிஞர் அலுவலக விசாரணையும் உறுதிப்படுத்தியது.

இதற்கிடையே, தன் மீதான வழக்கை எதிர்த்து அதிபர் ஜெலென்ஸ்கியின் இணையதளத்தில் ஸ்விட்லானா மனு தாக்கல் செய்தார். தான் செலுத்திய 900,000 டாலர் வரிப்பணம் “நூற்றுக்கணக்கான எதிரிகளைக் கொல்வதற்குச் சமம்” என்று அவர் குறிப்பிட்ட அந்த மனு, ஒரே வாரத்தில் 25,000-க்கும் மேற்பட்டோரின் ஆதரவைப் பெற்று நாட்டின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில்தான், ரஷ்யாவிற்கு எதிரான போருக்கான நிதியைத் திரட்ட, ‘வயது வந்தோருக்கான’ (Adult content) பொழுதுபோக்குத் துறையைச் சட்டப்பூர்வமாக்கும் புதிய மசோதாவை உக்ரைன் நாடாளுமன்றத்தில் நிதிக் குழுத் தலைவரான யாரோஸ்லாவ் ஜெலஸ்னியாக் முன்வைத்துள்ளார்.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

இதன் மூலம் உக்ரைனுக்குச் சுமார் 2.5 கோடி டாலர் வரி வருவாய் கிடைக்கும் என்றும், அந்தப் பணத்தைக் கொண்டு போர்க்களத்திற்குத் தேவையான 30,000 ட்ரோன்களைச் சொந்தமாக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறை ஊழலில் சிக்கியுள்ள இத்துறைக்குச் சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிப்பதன் மூலம், அரசின் வருவாய் அதிகரிப்பதோடு வீரர்களின் உயிரையும் காப்பாற்ற முடியும் எனவும் வாதிடப்படுகிறது.

மக்களின் பலத்த ஆதரவைத் தொடர்ந்து, இம்மசோதாவை நாடாளுமன்றம் பரிசீலிக்கும் என அதிபர் ஜெலென்ஸ்கி உறுதியளித்தார். அதன்படி, இந்த மசோதா கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. தற்போது இது இறுதி வாக்கெடுப்பிற்காகக் காத்திருக்கிறது.

போர்க்களத் தேவைகளுக்கும், சமூகத் தார்மீகக் கேள்விகளுக்கும் இடையே உக்ரைன் எடுக்கும் இந்த முடிவு, போர் நிதியுதவிக்கான ஒரு புதிய வழியை உலகிற்கு உணர்த்தக்கூடும். அதேநேரம் ஆபாசத்துக்கு அளிக்கப்படும் இந்த அரசு அங்கீகாரம் உக்ரைனின் எதிர்காலத் தலைமுறையைப் பாதிக்கும் எனவும் கருத்து வேறுபாடுகள் விவாதிக்கப்படுகின்றன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நீட் ஆட்கொல்லி தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?" – உதயநிதி காட்டம்

“நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க...

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்...

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்… மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு...

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான...