9
September, 2026

A News 365Times Venture

9
Wednesday
September, 2026

A News 365Times Venture

"பொய் என நிரூபிக்கப்பட்ட 'சர்க்காரியா அறிக்கை'யை வாசிக்க வெட்கமில்லையா?" – விஜய்க்கு அப்பாவு கேள்வி

Date:

இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசிய உரையைக் கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் அப்பாவு.

அப்பாவு, “சட்டமன்றத்தில் இன்று காவல்துறை மானியத்திற்குப் பதிலளித்த முதல்வர். தமிழக மாணவ, மாணவிகளைச் சீரழித்து வரும் போதைப் பொருள் கலாசாரத்தைக் கட்டுப்படுத்தவும், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து கடத்தி விற்பனை செய்து வரும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தவும் எந்தப் பதிலும் சொல்லாமல், இது 100 நாள்களில் உருவானதல்ல பல ஆண்டுகளாக வேரூன்றி இருக்கிறது என்று பொறுப்பற்ற பதில் சொல்லி கஞ்சா போன்ற போதைப் பொருள் கடத்தலுக்கும், விற்பனைக்கும் துணைநிற்கும் செயலில் ஈடுபட்டுவிட்டீர்களே CM sir ?

விஜய் உரை

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும்கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதாகப் பதில் சொல்ல முடியாமல், 50 ஆண்டுகளுக்கு முன் பொய்க் குற்றச்சாட்டு என்று நிரூபிக்கப்பட்ட ‘சர்காரியா கமிஷன்’ அறிக்கையை சட்டமன்றத்தில் வாசிக்க வெட்கமாக இல்லையா CM sir ?

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடுத்து வைத்த மக்கள் பிரச்னைக்குப் பதில் சொல்ல திராணியில்லாமல் திமுக மேடை பேச்சிகளை எடுத்து பதிலளிக்கும் முதல்வரே!

உங்கள் அமைச்சரவை பெண் உறுப்பினர் அலைபேசி மூலம் “லட்சுமணன்” என்பவரை ஜட்டியோடு உட்கார வைத்து அடித்துக் கொன்று விடுவேன் என்று மிரட்டியதையும் சட்டமன்றத்தில் பேசியிருக்கலாமே CM sir?

தமிழ்நாட்டில் தவெக நிர்வாகிகளும் உறுப்பினர்களும் செய்து வருகின்ற கொலை கொள்ளை போதைப் பொருள் விற்பனை பாலியல் சீண்டல் போன்ற வழக்குகள் மீது உறுதியான நடவடிக்கையை எடுப்போம் என்று தெரிவிப்பதை விட்டுவிட்டு

FIR பதிவு செய்து இருக்கிறோம் என அலட்சியமாகச் சொன்ன பதில் மக்களை ஏமாற்றும் செயல் இல்லையா CM sir ?

நாட்டின் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம் என்பது பற்றி எந்தப் பதிலும் பேசாமல் அண்டை மாநில உதவியாளர்கள் எழுதிக் கொடுத்ததை சினிமா அங்க அசைவுகளோடு (நடித்து) வாசித்து பொதுக் கூட்டத்தில் நான்காம் தர மேடைப் பேச்சாளரைப் போன்று தரம் தாழ்ந்து பேசியது சட்டமன்றத்தின் மாண்பைச் சந்தி சிரிக்க வைத்துவிட்டதே CM Sir?” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"நீட் ஆட்கொல்லி தேர்வுக்கு இன்னும் எத்தனை குழந்தைகளை இழப்பது?" – உதயநிதி காட்டம்

“நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசிற்கு உரிய அழுத்தம் கொடுக்க...

சீரற்ற சாலை; மருத்துவக் கழிவுகளால் நோய் பரவல் அபாயம்; கவனிப்பை பெறுமா செங்கல்பட்டு அரசு மருத்துவமனை?

தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலையான ஜி.எஸ்.டி சாலைக்கு அருகில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்...

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்… மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு...

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான...