21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

"போதை இல்லாத தமிழகம் எனச் சொல்லும் அரசு, புது மதுபானங்களை அதிகரிப்பது ஏன்?"- மது ஒழிப்பு கூட்டமைப்பு

Date:

“டாஸ்மாக் கடைகளில் மேலும் 25 புதிய வகை மதுபானங்களை அறிமுகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது” எனத் தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு தமிழக அரசைக் கண்டித்துள்ளது.

டாஸ்மாக் கடை

இதுகுறித்து தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.இராசன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “20-க்கும் மேற்பட்ட மதுபான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 25 புதிய மதுபான வகைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அவற்றுக்கான விலை நிர்ணயம் நடைபெற்று வருவதாகவும், டாஸ்மாக் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலுக்குப் பின்னர் விற்பனை தொடங்கும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் அரிசி விலையைக் கட்டுப்படுத்திட அரிசி உற்பத்தியாகும் அண்டை மாநிலங்களுடன் பேசவில்லை. எதிர்காலத்தில் அரிசி உற்பத்தி அளவை தமிழகத்தில் அதிகரிக்க என்ன திட்டம் என்பதிலும் தெளிவில்லை. மேலும், தமிழகம் தற்போது வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம், கல்வி, மருத்துவம், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறது. இது தொடர்பான விவாதமோ, ஆலோசனையோ இல்லை.

இத்தகைய சூழ்நிலையில், மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக மதுபானங்களின் வகைகளை அதிகரிப்பது ஏன்? ஒருபுறம் போதை இல்லாத தமிழகம் என்ற இலக்கை அரசு முன்வைக்கிறது. மறுபுறம், மதுபான விற்பனையில் புதிய வகைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த இரு அணுகுமுறைகளுக்கும் இடையே உள்ள முரண்பாட்டை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழகத்தில் 2026-27 நிதியாண்டில் மதுவிற்பனை எவ்வளவு இருக்கும் என்பதை மதிப்பிடுவதற்கு, சமீபத்திய டாஸ்மாக் வருவாய் மற்றும் தமிழக அரசின் பட்ஜெட் தரவுகளை அடிப்படையாகக் கொள்ளலாம்.

2024-25-ல் டாஸ்மாக் மொத்த வருவாய் சுமார் ரூ. 48,381 கோடி, 2025-26-ல் இது ரூ. 50,845.84 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட சுமார் 5.1 சதவிகிதம் அதிகம். தமிழக அரசின் 2026-27 பட்ஜெட்டில் மாநில ஆயத்தீர்வை வருவாய் ரூ. 14,164 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது 2025-26 திருத்த மதிப்பீட்டான ரூ. 12,462 கோடியைவிட 14 சதவிகிதம் அதிகம். எனவே கடந்தாண்டு வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டால் 2026-27-க்கான வருவாய் ரூ. 54,000 கோடியாக இருக்கக்கூடும். இந்த இலக்கைக் குறிவைத்துத்தான் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றனவோ என்ற ஐயம் எழாமல் இல்லை.

பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்களுக்கு அருகில் செயல்பட்ட 717 டாஸ்மாக் கடைகளை மூடிய அரசு இப்போது 25 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்துவது, ‘போதை இல்லாத தமிழகம்’ என்ற அரசின் இலக்குடன் புதிய மதுபான அறிமுகம் என்பது முரணானது.

புதிய மதுபான வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டால் இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறையினரிடையே ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் குறித்து அரசு சிந்திக்கவேண்டும். மதுவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறுவாழ்வு மற்றும் சிகிச்சை மையங்கள் எத்தனை உருவாக்கப்பட்டுள்ளன? தமிழகத்தை படிப்படியாக மதுவிலக்கு மாநிலமாக மாற்றுவதற்கான அரசின் தெளிவான காலக்கெடு மற்றும் செயல்திட்டம் என்ன? போன்ற கேள்விகளை அரசு முன் மக்கள் வைக்கிறார்கள்.

சி.சே. இராசன்
சி.சே. இராசன்

மது விற்பனையை வெறுமனே வருவாய் ஆதாரமாகப் பார்க்காமல், குடும்பங்களின் பொருளாதார, சுகாதாரச் சூழலை அரசு கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மதுப் பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்திலிருந்து மீட்பதற்கான ஆலோசனை, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகளை அரசு உருவாக்க வேண்டும். இளைஞர்களுக்கான விளையாட்டு, வேலைவாய்ப்பு, சமூகப் பங்கேற்பு வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

போதை இல்லாத தமிழகம் என்பது அரசின் வெற்று முழக்கமாக இல்லாமல், மது விற்பனையைக் குறைக்கும் நடைமுறை கொள்கையாக மாற வேண்டும். எனவே, 25 புதிய மதுபான வகைகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மதுக்கடைகளின் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து, மதுவிலக்கை நோக்கிய தெளிவான காலக்கெடு கொண்ட செயல் திட்டத்தை அரசு வெளியிட வேண்டும் என தமிழக மது ஒழிப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`பொய்புகார் மூலம் மிரட்டுகிறார்' – அமைச்சர் ஸ்ரீநாத் நண்பர் மீது குற்றம்சாட்டும் தவெக பெண் நிர்வாகி

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியைச்சேர்ந்தவர் ரோகிணி.  இவர், த.வெ.க தெற்குமாவட்ட செயற்குழு உறுப்பினராக...

முதல்வர் லண்டன் பயணம்: “அண்ணாமலை முதிர்ச்சியான தலைவர் என நினைக்கிறேன்; ஆனால்…" – மரிய வில்சன்

சென்னை ஆர்.கே. நகரில், மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் புதிய பேருந்து நிலையம்...

'உட்கார கூட இடமில்ல…' – முதல்வர் விஜய் ஆய்வு செய்த எழும்பூர் மருத்துவமனையின் அவலநிலை என்ன?

சென்னை எழும்பூரில் உள்ள பழமையான மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் சமீபத்தில்...

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி...