தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக 144 பேர் வாக்களித்திருந்தனர். இதில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் இரண்டாகப் பிரிந்து, 25 பேர் தவெக-விற்கு ஆதரவாகவும், 22 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “தவெக-விற்கு எதிராக வாக்களிக்க கொறடா உத்தரவிட்டும், சட்டத்தை மீறி 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக-விற்கு ஆதரவாகச் செயல்பட்டுள்ளனர். 6 அமைச்சர் பதவிகள் மற்றும் 10 வாரியப் பதவிகள் தருவதாக ஆசை காட்டி அதிமுக எம்.எல்.ஏ-க்களை வளைத்திருக்கிறார்கள். பதவிக்கு ஆசைப்பட்ட சில முன்னாள் அமைச்சர்கள் இதில் மும்முரமாக இருக்கிறார்கள். கட்சிக்குத் துரோகம் செய்த 25 எம்.எல்.ஏ-க்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் காட்டமாக விமர்சித்திருந்தார்.



அதன் அடிப்படையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பல்வேறு மாவட்டக் கழகச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். முக்கிய நிர்வாகிகள் பலர் அவர்களது மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட முக்கிய நிர்வாகிகள்:
மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் சில முக்கிய தலைவர்கள்:
நத்தம் இரா. விசுவநாதன் (திண்டுக்கல் கிழக்கு)
S.P. வேலுமணி (கோவை புறநகர் தெற்கு)
C.Ve. சண்முகம் (விழுப்புரம்)
R. காமராஜ் (திருவாரூர்)
டாக்டர் C. விஜயபாஸ்கர் (புதுக்கோட்டை வடக்கு)
பி. தங்கமணி (நாமக்கல்)
ப.பெஞ்சமின் (திருவள்ளுர் மத்தியம்)
K.P. அன்பழகன் (தருமபுரி)
உடுமலை K. ராதாகிருஷ்ணன் (திருப்பூர் புறநகர் மேற்கு)
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள்:
புதிய மாவட்டச் செயலாளர்விழுப்புரம் – R. பசுபதி
கோவை புறநகர் தெற்கு – முனைவர் செ.ம. வேலுசாமி
புதுக்கோட்டை வடக்கு – V. பழனிவேல்
நாமக்கல் – K.P.P. பாஸ்கர்
திருவாரூர் – R.D. மூர்த்தி (எ) தெஷ்ணாமூர்த்தி
திருவள்ளூர் மத்தியம் – K.S. ரவிசந்திரன்
இராணிப்பேட்டை கிழக்கு – A.P.S. லோகநாதன்
இராணிப்பேட்டை மேற்கு – சுமைதாங்கி சி. ஏழுமலை
திருப்பத்தூர் – டாக்டர் S. பசுபதி



கடலூர் வடக்கு – M.C. தாமோதரன்
கிருஷ்ணகிரி மேற்கு – M. ராமு
ஈரோடு மாநகர் – R. மனோகரன்
நீலகிரி – பால. நந்தகுமார்
திருச்சி மாநகர் – C. கார்த்திகேயன்
கரூர் – K. கமலக்கண்ணன்
தேனி மேற்கு – V.T. நாராயணசாமி
திருநெல்வேலி புறநகர் – K. ராமசுப்பிரமணியன்
கழக உடன்பிறப்புகள் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என பொதுச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.




