9
May, 2026

A News 365Times Venture

9
Saturday
May, 2026

A News 365Times Venture

`பெரியார் இல்லாமல் நமக்கு அரசியல் இல்லை!’ – சீமான் கருத்துக்கு இயக்குநர் பார்த்திபன் பதில்

Date:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீப நாட்களாக பொது வெளியில் பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார். அதற்கு பெரியாரிஸ்டுகளும், பெரியாரிய அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு `பெரியார் குறித்து உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை கூறியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று பெரியார் ஆதரவாளர்கள் சீமான் வீட்டை முற்றுகையிட்டனர்.

பெரியார்

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சுக்காக காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன், நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் பெரியார் குறித்து சர்சையாகவே பேசி வருகிறார் சீமான். ஈரோடு இடைத்தேர்தலிலும் பெரியார் மீதான விமர்சனத்தையே அவர் பிரதானமாக முன்னிறுத்தி, பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய படப்பிடிப்புக்கான ஏற்பாடு தொடர்பாக புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்த பார்த்திபன், அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, `நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பெரியாரை விமர்சித்துக் கொண்டிருக்கிறாரே ?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

சீமான்
சீமான்

அதற்கு பதிலளித்த பார்த்திபன், “பெரியாரை நீக்கிவிட்டு இங்கு நமக்கு அரசியல் என்று இல்லை. அதனால்தான் அவரும் பெரியாரை வைத்து அந்த அரசியலை செய்கிறார். அது அவருக்கு ப்ளஸ்சா மைனசா என்பது வேறு விஷயம். இப்போதும் நாம் அரசியல் செய்வதற்கு பெரியார் தேவைப்படுகிறார் இல்லையா? அப்படியென்றால் அவர் எவ்வளவு பெரிய பெரியார் ?” என்று பதிலளித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK: "விஜய் முதல்வராவார்" – தவெக-விற்கு ஆதரவளித்த விசிக; கடிதத்தைப் பெற்ற ஆதவ் அர்ஜுனா

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நடந்து முடிந்துள்ள தமிழக...

அதிமுக – திமுக கூட்டணி? "அதெல்லாம் வதந்திகள்; ஆனால்…" – என்ன சொல்கிறார் சிபிஎம் எம்.ஏ. பேபி?

தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி...

VCK: 'ஆட்சிக்கு ஆதரவு தர விசிக பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறதா?' – ரவிக்குமார் எம்.பி., விளக்கம்

தவெகவிற்கு ஆதரவளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

“அமித் ஷாவுக்காக காத்திருக்கும் ஆளுநர்.!” – ரிப்போர்ட் ரெடி!

தமிழகத்தின் முதல்வராக விஜய் தேர்தெடுக்கபடுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்துவருகிறது. போதிய பெரும்பான்மை...