5
November, 2026

A News 365Times Venture

5
Thursday
November, 2026

A News 365Times Venture

திருவண்ணாமலை: நந்தி வாகனத்தில் ஏறி தூய்மைப் பணி; ஊழியர் சஸ்பெண்ட்; தீயணைப்புத் துறையினரும் வருத்தம்!

Date:

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா வரும் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த நிலையில், திருக்கோயிலின் கோபுரங்களைச் சுத்தம் செய்து தருமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டதால், தீயணைப்புத் துறையினர் நேற்று முன்தினம் (3-ம் தேதி) தண்ணீரைப் பீய்ச்சியடித்து கோபுரங்களைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, தீயணைப்பு வாகனம், ஏணி போன்றவற்றை பயன்படுத்தாமல், கோடிக்கணக்கான பக்தர்களின் ஆன்மிக உணர்வு மற்றும் வழிபாட்டு மரபுகளுடன் தொடர்புடைய சிவபெருமானின் நந்தி (ரிஷப) வாகனத்தை பயன்படுத்தி, அதன்மீது ஏறி நின்று தண்ணீரைப் பீய்ச்சியடித்தது, பக்தர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, பெரும் சர்ச்சைக்கும் வழிவகுத்தது.

“கோபுரங்களைச் சுத்தம் செய்வது அவசியமான பணி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அரசுத் துறைகளின் அலட்சியத்துக்கும், நிர்வாக வசதிக்காகவும், பக்தர்களின் இறை நம்பிக்கையை பலிகொடுப்பது நியாயமா? இந்தச் சம்பவத்துக்காக கோயில் நிர்வாகம், பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். முழுமையான விசாரணை நடத்தி, தவறு செய்தோர்மீது துறைரீதியான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

நந்தி வாகனத்தில் ஏறி தூய்மைப் பணி

`இனி வரும் காலங்களில் கோயில் வாகனங்கள், ஆன்மிக நடைமுறைகளுக்கு முரணாக பயன்படுத்தப்படாது. கோயில்களின் புனிதத்தை பாதுகாப்போம்’ என்று அறநிலையத்துறை உறுதியளிக்க வேண்டும்’’ என பலத் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்புக் கிளப்பின.

இந்த நிலையில், ரிஷப வாகனம்மீது ஏறி நின்ற விவகாரத்தில் கோயில் ஊழியரான அசோக் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். மேலும், இந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்து, அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி கடிதம் வழங்கியிருக்கிறார்.

அவரின் கடிதத்தில், `திருமஞ்சன கோபுரத்தைச் சுத்தம் செய்யும்போது, புறாவின் எச்சம் பசைபோல ஒட்டிக்கொண்டிருந்ததால், கீழே இருந்து சரிவர சுத்தம் செய்ய இயலவில்லை. எனவே, ரிஷப வாகனத்தின்மீது ஏறி நின்று சுத்தம் செய்தது தவறு தான். இனி வரும் காலங்களில், இதுபோன்ற நிகழ்வு ஏற்படாத வண்ணம் நடந்து கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கேரளாவில் பிறந்தவர்.. இன்று லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர்! – அமெரிக்க அரசியலில் முத்திரை பதித்த நித்யா ராமன்

அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸின் மேயர் தேர்தலில் வெற்றி...

“நீங்கள் இருக்கும்போது எனக்கு நாட்டைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை" – பிரதமரிடம் பேசிய சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மூத்த அரசியல் தலைவருமான சரத் பவாருக்கு...

திருப்பரங்குன்றம்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவை எதிர்த்து தர்கா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை...