5
November, 2026

A News 365Times Venture

5
Thursday
November, 2026

A News 365Times Venture

US Elections: சபாநாயகர் பதவியை நோக்கி ஹக்கீம் ஜெஃப்ரிஸ்… அமெரிக்க வரலாற்றில் புது மாற்றமா?

Date:

அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில், அடுத்த சபாநாயகராக அக்கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பதவியை அவர் வகிக்கும் பட்சத்தில், அமெரிக்க வரலாற்றின் முதல் கறுப்பின சபாநாயகர் என்ற நிலையை எட்டுவார்.

பெரும்பான்மையும் சபாநாயகர் வாய்ப்பும்

நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையைக் கைப்பற்றியதே இந்த எதிர்பார்ப்புக்கு அடிப்படை. அங்கு பெரும்பான்மை பெறும் கட்சி தனது சபாநாயகர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். அக்கட்சியின் நாடாளுமன்றத் தலைவராக இருக்கும் ஜெஃப்ரிஸ், இயல்பாகவே இப்பதவிக்கான முதன்மைத் தேர்வாக உள்ளார்.

hakeem jeffries

சபாநாயகர் வேட்புமனுவுக்குக் கட்சியினரின் ஆதரவைக் கோரி, நவம்பர் 4-ம் தேதி அவர் கடிதம் எழுதியுள்ளார். நவம்பர் 18-ம் தேதி நடக்கவுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைமைத் தேர்தலில் அவர் வேட்பாளராகத் தேர்வானாலும், ஜனவரி மாதம் நடைபெறும் பிரதிநிதிகள் சபையின் வாக்கெடுப்பில் 218 வாக்குகளைப் பெற்றாக வேண்டும். அப்போதுதான் அவர் அதிகாரபூர்வமாகச் சபாநாயகராக முடியும்.

சட்டத்துறையிலிருந்து நாடாளுமன்றம் வரை

1970-ல் நியூயார்க்கின் புரூக்ளினில் பிறந்த ஹக்கீம் ஜெஃப்ரிஸ், பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலும், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கையும் பயின்றவர். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

hakeem jeffries

2007-ல் நியூயார்க் மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். காவல்துறையின் ‘ஸ்டாப் அண்ட் ஃபிரிஸ்க்’ (Stop and Frisk) நடவடிக்கையில், குற்றம் சாட்டப்படாதவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பதிவுசெய்வதற்கு எதிராகச் சட்டத் திருத்தம் கொண்டுவந்தார். தொடர்ந்து 2013-ல் அமெரிக்கப் பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வரலாற்றுப் பின்னணி

அமெரிக்கக் காங்கிரஸில் குற்றவியல் நீதி சீர்திருத்தத்தை நோக்கமாகக் கொண்ட ‘FIRST STEP Act’ சட்டத்தின் முக்கிய ஆதரவாளராகச் செயல்பட்டார். 2019-ல் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகவும், 2023 ஜனவரியில் நாடாளுமன்றத் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

அமெரிக்கக் கட்சியொன்றின் நாடாளுமன்றத் தலைவரான முதல் கறுப்பினத்தவர் இவர்தான்.

தற்போது அந்தப் பயணம் சபாநாயகர் பதவியை நோக்கி நகர்ந்துள்ளது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் அது முக்கிய மாற்றமாக அமையும்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம்: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவை எதிர்த்து தர்கா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் கார்த்திகை...

'ஆட்சிக்கவிழ்ப்பு ஆபரேஷன்; தயாராகும் எதிர்க்கட்சிகள்(?) அலர்ட் மோடில் முதல்வர் விஜய்?

சட்டமன்றத்தில் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டி 6 மாதம் முடிவடையவிருக்கிறது....

US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ்

அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அந்நாட்டுச் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட...

6am Special Show: "பொழுதுபோக்குக்கு முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வளர்ந்திருக்கிறது?" – சீமான்

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி...