7
November, 2026

A News 365Times Venture

7
Saturday
November, 2026

A News 365Times Venture

"பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள்! உண்மையை வெளிக்கொண்டு வந்த பெருமாள் முருகன்" – சு.வெங்கடேசன்

Date:

கடந்த மாதம் கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்.

இந்த நூலகத்திற்கான நூல்கள் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். பெரியார் அறிவுலகத்திற்கு வாங்கப்பட்ட நூல்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்றும், நூலின் விலை மிக அதிகமாக இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் அவர்.

இந்த நூல்கள் அகல்விளக்கம் என்னும் குறிப்பிட்ட பதிப்பகத்தில் இருந்து வாங்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து மதுரை நாடாளுமன்ற சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

“பெரியார் அறிவுலகத்திற்கு நூல்கள் வாங்குவதில் நிகழ்ந்துள்ள ஊழலை எழுத்தாளர் பெருமாள் முருகன் இன்று வெளிக்கொண்டுவந்துள்ளார்.

அவருக்கு எனது வாழ்த்துகள்.

கட்டிடத்தின் பெயரிலும், கட்டிட வடிவமைப்புக்கான ஒப்புதலின் பெயரிலும், அலமாரிகள் உள்ளிட்ட பொருட்களின் பெயரிலும் நடக்கும் ஊழலைப் போன்றதல்ல புத்தகத்தின் பெயரில் நடக்கும் ஊழல். அது நிலைத்திருந்து நிரந்தரமாக நஞ்சூட்டும் செயலுக்கு ஒப்பானது.

பெருமாள் முருகன் கண்டறிந்து வெளிக்கொண்டு வந்திருக்காவிட்டால், கீழடியின் வரலாறு எனும் நூல் நந்தி சிலை கண்டறியப்பட்ட செய்தியை சொல்லக் காத்துக் கொண்டே இருக்கும். அது வரலாற்றை சொல்வதல்ல, உண்மையான வரலாற்றைக் கொல்வது.

பெரியார் அறிவுலகிற்குள் செல்லும் ஒரு வாசகனின் மனதிற்குள் இந்தச் செயல் எல்லா காலத்திலும் நடந்து கொண்டிருக்கும்.

அறிவுலகில் நிகழும் திருட்டும் ஊழலும் வெறும் பொருளாதார இழப்பை மட்டும் சார்ந்ததல்ல; மதிப்பிட முடியாத இழப்புகளைக் கொண்டது.

இந்த ஊழல் குறித்து முறையான, பொறுப்புணர்வு மிக்க விசாரணை தேவை.

போலியான புத்தகங்கள் பெரியார் அறிவுலகத்திலிருந்து உடனே அகற்றப்பட வேண்டும்!”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சிவகங்கை சோகம்: இறந்த தந்தையின் உடலுடன் 3 நாள்கள் வசித்த மனநலம் குன்றிய மகன்!

சிவகங்கையில் தந்தை உயிரிழந்தது கூடத் தெரியாமல், அவரது உடலுடன் மனநலம் பாதிக்கப்பட்ட...

'மக்கள் என் பக்கம்; 234 தொகுதிகளுக்கும் ஒரு திட்டம்' – தனுஷ் சூசகம்!

சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடிகர் தனுஷின் 'ஓம்' பட ஆடியோ...

"இனி நலத்திட்டங்களை பெற ஆதார் இல்லை; வாக்காளர் அட்டை வேண்டுமா?" – ராகுல் காந்தி எதிர்ப்பு

இனி அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டையைத் தாண்டி, வாக்காளர் அட்டை...

“வி.எஸ் பாபு ICU-வில் இருக்கிறார்..!" – கொளத்தூர் எம்.எல்.ஏ உடல்நிலை குறித்து அருண்ராஜ் தகவல்

சென்னை எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இரத்த மஜ்ஜை மாற்று...