7
November, 2026

A News 365Times Venture

7
Saturday
November, 2026

A News 365Times Venture

"இனி நலத்திட்டங்களை பெற ஆதார் இல்லை; வாக்காளர் அட்டை வேண்டுமா?" – ராகுல் காந்தி எதிர்ப்பு

Date:

இனி அரசின் நலத்திட்டங்களைப் பெற ஆதார் அட்டையைத் தாண்டி, வாக்காளர் அட்டை வேண்டும் என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பேசியுள்ளார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

ஆபத்தான சதித்திட்டம்

“நலத்திட்டங்களுக்கான தகுதியை இனி ஆதார் அடிப்படையில் தீர்மானிக்காமல், வாக்காளர் அடையாள அட்டை மூலம் தீர்மானிக்கப் போவதாக மோடி அரசின் அமைச்சர் ஒருவர் அறிவித்துள்ளார்.

இது மிகவும் ஆபத்தான ஒரு சதித்திட்டம். சற்று நிதானமாக யோசித்து இதைப் புரிந்துகொள்ளுங்கள்.

ஆதார் அடையாள அட்டை (For Representation)

எஸ்.ஐ.ஆர் என்ற பெயரில் லட்சக்கணக்கான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றன. இதை உடனடியாகத் தடுக்காவிட்டால், இன்னும் பல பெயர்கள் நீக்கப்படும்.

அப்படி நீக்கப்படுபவர்கள் பெரும்பாலானோர் யார்? பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கும் மக்கள்தான்.

மோடி அரசின் ஊழியரான ஞானேஷ் குமார்

வாக்காளர் பட்டியல் என்பது நடுநிலையான தேர்தல் ஆணையத்தின் கைகளில் இருக்க வேண்டும். ஆனால் இப்போது அது மோடி அரசின் ஊழியரான ஞானேஷ் குமாரின் கைகளில் இருக்கிறது.

பாஜகவுடன் இணைந்து வாக்காளர் தில்லுமுல்லுவில் அவர் ஈடுபட்டதை ஆதாரத்துடன் நாம் கையும் களவுமாகப் பிடித்துள்ளோம்.

எப்போதும் பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்கும் வகையில் ஒரு பட்டியலைத் தயாரிக்க அவர்கள் முயன்று வருகிறார்கள். இப்போது அதே பட்டியல்தான் உங்களுக்கு நலத்திட்ட உதவி கிடைக்குமா கிடைக்காதா என்பதையும் தீர்மானிக்கப் போகிறது.

வாக்கு போச்சு

பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று நேற்று முடிவு செய்த எவரொருவரின் பெயரும், ஒவ்வொன்றாகப் பட்டியலில் இருந்து தூக்கப்படும்.

பெயர் நீக்கப்பட்டால் வாக்கு போச்சு. வாக்கு போனால் — உரிமைகள் போச்சு.

அடுத்த கணம் யோசிப்பதற்குள், கடத்தப்பட்ட ஒரு ஜனநாயகத்தின் கண்ணுக்குத் தெரியாத குடிமகனாக நீங்கள் மாறியிருப்பீர்கள். அங்கு மக்கள் அரசைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். அரசுதான் தன் மக்களைத் தேர்ந்தெடுக்கும்!

அடுத்து என்ன?

இன்று பஞ்சாயத்து ராஜ் திட்டங்கள். நாளை ரேஷனா? ஓய்வூதியமா? 100 நாள் வேலைத் திட்டமா? இலவச வீடுகளா? கல்வி உதவித்தொகையா? இடஒதுக்கீடா?

இது தேர்தலில் வெற்றி பெறுவதற்கான அரசியல் அல்ல. தேர்தலையே திருடுவதற்கான ஏற்பாடு. நிரந்தரமாக அதிகாரத்திலேயே நீடிப்பதற்கான ஒரு சதித்திட்டம்.

வாக்களிப்பது உங்கள் உரிமை, அது ஒரு நிபந்தனை அல்ல. ஒரு ஏழையின் ஓய்வூதியம் அவரது வாக்காளர் அட்டையைப் பிணையாக வைத்துத் தடுக்கப்படக் கூடாது.

இது வெறும் வாக்கு திருட்டு மட்டுமல்ல. உரிமைகளின் திருட்டு.

இதை நடக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சிவகங்கை சோகம்: இறந்த தந்தையின் உடலுடன் 3 நாள்கள் வசித்த மனநலம் குன்றிய மகன்!

சிவகங்கையில் தந்தை உயிரிழந்தது கூடத் தெரியாமல், அவரது உடலுடன் மனநலம் பாதிக்கப்பட்ட...

'மக்கள் என் பக்கம்; 234 தொகுதிகளுக்கும் ஒரு திட்டம்' – தனுஷ் சூசகம்!

சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடிகர் தனுஷின் 'ஓம்' பட ஆடியோ...

"பெரியார் அறிவுலகத்தில் போலி நூல்கள்! உண்மையை வெளிக்கொண்டு வந்த பெருமாள் முருகன்" – சு.வெங்கடேசன்

கடந்த மாதம் கோவையில் பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார் தமிழ்நாடு முதலமைச்சர்...

“வி.எஸ் பாபு ICU-வில் இருக்கிறார்..!" – கொளத்தூர் எம்.எல்.ஏ உடல்நிலை குறித்து அருண்ராஜ் தகவல்

சென்னை எலும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு இரத்த மஜ்ஜை மாற்று...