8
May, 2026

A News 365Times Venture

8
Friday
May, 2026

A News 365Times Venture

“பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை வாபஸ் பெறுகிறோம்" – இந்தியக் குழுவை சந்தித்த கொலம்பியா அறிவிப்பு!

Date:

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசு அனைத்துக் கட்சிக் குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டையும், நடவடிக்கைகளையும் விளக்கிவருகிறது. அதர் தொடராக வியாழக்கிழமை கொலம்பியா சென்ற அந்தக் குழு செய்தியாளர்களைச் சந்தித்தது.

சசி தரூர்

அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர், “இந்தியாவில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தானில் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியாவின் அறிக்கை ஏமாற்றத்தை அளித்தது” என்றார். அதைத் தொடர்ந்து இந்தியத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட முந்தைய அறிக்கையை கொலம்பியா அதிகாரபூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது.

இந்தியாவின் அனைத்துக் கட்சிக் குழுவைச் சந்தித்த பிறகு, கொலம்பியாவின் துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலண்டா வில்லாவிசென்சியோ, “ எங்களுக்குக் கிடைத்த விளக்கம், அங்கு இருக்கும் உண்மையான நிலை, காஷ்மீரில் என்ன நடந்தது என்பது குறித்து இப்போது எங்களுக்குக் கிடைத்த விரிவான தகவல்களின் மூலம், பேச்சுவார்த்தையைத் தொடர முடியும் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, எங்களின் கவலை தெரிவித்த அறிக்கையை திரும்பப் பெறுகிறோம். இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை தூதுக்குழு முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளது.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`உலக நாடுகளுக்கு 10% வரி சட்டத்திற்குப் புறம்பானது' – நீதிமன்ற தீர்ப்பு; மீண்டும் சறுக்கிய ட்ரம்ப்

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது...

கேரளம்: `பாஜக 3 இடங்களை வென்றிருப்பது கவலையளிக்கிறது' – தேர்தல் தோல்வி குறித்து பினராயி விஜயன்

கேரளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் 102...

தவெக: “மக்கள் தீர்ப்புக்கு இழைக்கப்படும் அவமதிப்பு!" – நடிகை ஸ்ரேயா சரண் பதிவு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, தொடர்ந்து சலசலப்புடன் நகர்ந்துகொண்டிருக்கின்றன நாள்கள். இந்தத்...

தவெக: “திமுக – அதிமுக கூட்டணி அமைந்தால் பேரழிவு!” – நடிகர் விஷால் எச்சரிக்கை

தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பான சூழல்கள் நிலவி வரும் வேளையில், நடிகர்...