30
July, 2026

A News 365Times Venture

30
Thursday
July, 2026

A News 365Times Venture

பழனி கோயில் நில மோசடி: வழக்கின் நிலை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் உத்தரவு!

Date:

பழனி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி நிலம் மோசடியாக தனி நபர்கள் பெயருக்கு பதிவு செய்ய முயன்ற சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் மாவட்ட பதிவாளார் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் நிலத்தை விற்க முயன்றதாக முருகதாஸ், வெள்ளத்துரை, சேதுபதி, அன்வர்தீன் மற்றும் ஜஸ்டின் மணிகண்டன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீஸார் 4 பேரை கைதுசெய்திருக்கின்றனர்.

இதில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் ஜாமீன் பெற்றுள்ளதோடு கடந்த நான்கு நாள்களாக சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நில மோசடி தொடர்பாக இதுவரை 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 84 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அன்னபூரணி சிவகுமார், பழனி நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, பிரதீப் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள் .

ஜஸ்டின் மணிகண்டன்

இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வந்தது. அப்போது, ‘எதன் அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள்?’ என சிபிசிஐடி தரப்பிலும், அரசு தரப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ‘அரசு அலுவலர்களோடு இணைந்தே இந்த முறைகேடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்கிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில், “விசாரணைக்கு முன்பாக மனுதாரர்கள் இவ்வாறு வழக்கு தொடர்பாக தொடர்வதற்கு தகுதியை உறுதி செய்ய வேண்டும். பழனி மடத்தின் அறங்காவலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர், இதில் வழக்கு பதிவு செய்திருக்கிறார். ஆனால் அவர் அறங்காவலர் குழுவை சேர்ந்தவரா?” என கேள்வி எழுப்பினார்கள்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்

கோயில் நிர்வாகம் தரப்பில், “அன்னபூரணி சிவகுமார் மடத்தின் அறங்காவலர் அல்ல. அவர் கோயிலின் அறங்காவலர் குழுவில் ஒருவராக இருக்கிறார்” எனக் கூறினார்கள். அதையடுத்து நீதிபதிகள், “தற்போது வழக்கு விசாரணை என்ன நிலையில் இருக்கிறது என்பதை முதலில் பார்த்துக் கொள்வோம்; அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்” எனக் கூறி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5 தேதிக்கு ஒத்தி வைத்தார்கள்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

வந்தே மாதரம்: `அரசியல் நிர்ணய சபை முடிவுக்கு எதிரானது; இந்து தேசிய முயற்சி!' – எம்.பி ஆ.ராசா கண்டனம்

இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தேசியப் பாடலாக வந்தே மாதரத்தை அறிவிப்பதோடு,...

அமைச்சர்களுக்கு இலாகா இல்லை, பட்ஜெட்டுக்கு திட்டம் இல்லை! – புதுச்சேரியை முடக்கிய முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி சட்டசபையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்....

வடலூர்: கைவிடப்பட்டதா ரூ.100 கோடி திட்டம்? – வள்ளலார் சர்வதேச மையம் விவகாரத்தில் நடப்பது என்ன?

கடலூர் மாவட்டம், வடலூரில் அமைந்திருக்கிறது வள்ளலார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சத்திய ஞானசபை....

`நாளையிலிருந்து கோழி இறைச்சி கிடைக்காதா?' – கோழி வணிகர்களின் கூட்டமைப்பு சொல்வது என்ன?

தஞ்சையில் கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் இந்த மாதத்...