8
October, 2026

A News 365Times Venture

8
Thursday
October, 2026

A News 365Times Venture

பள்ளி குடிநீர் தொட்டிக்குள் மனிதக் கழிவு: “மூடி மறைத்த பள்ளி நிர்வாகம்" – டிடிவி தினகரன்

Date:

திண்டுக்கல் மாவட்டம் மானூர் அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாக அமமுக தலைவர் டிடிவி தினகரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திற்கு உட்பட்ட மானூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டிக்குள் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

டிடிவி தினகரன்

மாணவ, மாணவியர்கள் நாள்தோறும் அருந்தும் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டவுடன், அது குறித்து புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளி நிர்வாகமே, அவ்விவகாரத்தை இரண்டு நாட்களாக மூடி மறைக்க முயன்றிருப்பதன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கிறதா? அல்லது குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காக இவ்விவகாரம் மூடி மறைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் பெற்றோர்கள் மற்றும் ஊர்மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மானூர் தொடக்கப்பள்ளி உட்பட, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிராமப்புறங்களில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டப்படாமல் இருப்பதால், சமூக விரோதச் செயல்களின் கூடாரமாக அரசுப்பள்ளிகள் மாறிவருவதோடு, அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியமே இதுபோன்ற இழிச் செயல்களுக்கு வழிவகுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதல்வர் விஜய்

எனவே, அரசுப்பள்ளி குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டிருப்பதாக எழுந்துள்ள புகார் மீது விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை, இச்சம்பவம் குறித்து காவல்துறையின் உதவியுடன் விரிவான விசாரணை நடத்தி, இழிச் செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

Infosys, TCS, HCL… நிறுவனங்களை சஸ்பெண்ட் செய்த US; Green Card-க்கு காத்திருப்போருக்கு அதிர்ச்சி!

அமெரிக்காவில் பணிபுரியும் இந்திய IT ஊழியர்களுக்கு முக்கியமான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது....

பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு; ஆசிரியரை சஸ்பெண்ட் செய்யக் கோரி பெற்றோர்கள் புகார்!

திண்டுக்கல் மாவட்டம், பழனி கீரனூர் காவல் எல்லைக்குட்பட்ட மானூர் ஊராட்சி ஒன்றிய...