8
October, 2026

A News 365Times Venture

8
Thursday
October, 2026

A News 365Times Venture

பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு; ஆசிரியரை சஸ்பெண்ட் செய்யக் கோரி பெற்றோர்கள் புகார்!

Date:

திண்டுக்கல் மாவட்டம், பழனி கீரனூர் காவல் எல்லைக்குட்பட்ட மானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு விடுமுறை முடிந்து கடந்த 5-ம் தேதி திங்கட்கிழமை பள்ளி திறக்கப்பட்டபோது, மாணவர்களுக்கான சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் அடையாளம் தெரியாதவர்கள் மலம் கழித்து அசுத்தப்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது.  

​குழந்தைகளின் உயிருக்கே உலைவைக்கும் இத்தகைய செயலை உயர் அதிகாரிகளுக்கோ, பெற்றோர்களுக்கோ தெரிவிக்காமல், பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தொட்டியை பிளீச்சிங் பவுடர் போட்டுக் கழுவிவிட்டு இரண்டு நாள்களாக மூடி மறைத்துள்ளார். 

நேற்று முன்தினம் புதன்கிழமை பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் இந்த பகீர் தகவல் கசிந்தது. இதனால் கொதித்தெழுந்த பெற்றோர், மாணவர்களின் பாதுகாப்பில் விளையாடியதாகக் கூறி பள்ளியை அதிரடியாக முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

​விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேற்றிரவு மானூர் அரசு பள்ளிக்கு நேரில் வருகை தந்தார். அசுத்தம் செய்யப்பட்ட குடிநீர் தொட்டி அமைந்திருந்த இடம், பள்ளி வளாகத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் சுற்றுச்சுவர் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், இச்செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

பழனி அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு

இதனைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில் கீரனூர் காவல் துறையினர் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல் (பிரிவு 279), குடிநீரை அசுத்தப்படுத்துதல்/நச்சுத்தன்மையாக்குதல் (பிரிவு 272) மற்றும் விஷம்/நச்சுப் பொருட்கள் மூலம் ஆபத்து விளைவிக்க முயற்சித்தல் (பிரிவு 123) ஆகிய மூன்று கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர வலைவீசி வருகின்றனர்.

​இதன் தொடர்ச்சியாக இன்று காலை பழனி கல்வி மாவட்ட அலுவலர் சண்முகநாதன், ஒட்டன்சத்திரம் கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDOs) மற்றும் காவல் ஆய்வாளர்கள் மானூர் பள்ளிக்கு நேரில் வருகை தந்தனர். பெற்றோர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினருடன் (SMC) அவர்கள் தீவிர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.

அப்போது பெற்றோர்கள் அதிகாரிகளைச் சூழ்ந்துகொண்டு, “திங்கட்கிழமை நடந்த இவ்வளவு பெரிய விவகாரத்தை இரண்டு நாள்களாக யாருக்கும் சொல்லாமல் தலைமை ஆசிரியர் மறைத்தது ஏன்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவர்களின் நலனில் அலட்சியம் காட்டிய தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரை உடனடியாகப் பணி இடைநீக்கம் (Suspension) செய்ய வேண்டும் எனவும் திட்டவட்டமாக வலியுறுத்தினர்.

பெற்றோர்களின் கொந்தளிப்பைத் தொடர்ந்து அதிகாரிகளும் காவல்துறையினரும் கூட்டத்தில், உரிய நடவடிக்கை விரைந்து எடுப்பது, சிசிடிவி கேமரா, காவலாளி நியமிப்பது உள்ளிட்ட ​ உத்தரவாதத்தை அளித்ததைத் தொடர்ந்து அமைதி திரும்பிய போதிலும், மானூர் பள்ளி வளாகத்தில் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related