24
June, 2026

A News 365Times Venture

24
Wednesday
June, 2026

A News 365Times Venture

“நேரு பாகிஸ்தானுக்கு ரூ.83 கோடி வழங்கினார்; அதை வைத்து தான் பாகிஸ்தான்.." – சிவ்ராஜ் சிங் பேச்சு

Date:

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலையொட்டி, இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையே இருந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது இந்தியா.

இது குறித்து தற்போது இந்திய மக்களிடம் கருத்து கேட்கத் தொடங்கியுள்ளது. இது குறித்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் மக்களிடம் பேசியதாவது,

“1960-ம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அப்போதைய பிரதமர் நேரு கையெழுத்திடும் போது, நிபுணர்கள் கடுமையாக எச்சரித்தனர். இருந்தும், அவர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தம் மூலம் தண்ணீர் மட்டும் கொடுத்தத்தோடு அல்லாமல், பாகிஸ்தானுக்கு 83 கோடி ரூபாயை நேரு வழங்கினார். அந்த 83 கோடி ரூபாயின் தற்போதைய மதிப்பு ரூ.5,500 கோடி.

நேரு

இந்தப் பணத்தை வைத்து பாகிஸ்தான் சிந்து நதிகளில் உள்ள மேற்கு ஆறுகளில் இருந்து தண்ணீர் கொண்டுப்போகும் கால்வாய்களைக் கட்டினார்கள்.

இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் வண்ணம் தான் நாம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கி வருகிறோம். ஆனால், பாகிஸ்தானோ தீவிரவாதிகளை உருவாக்கி கொண்டிருக்கிறது.

சிந்து நீர் ஒப்பந்தத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூட நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகளை தெரிவித்தார்.

நேரு பாகிஸ்தானுக்கு நிதி உதவி செய்து அமைதியை வாங்கினார். ஆனாலும், அது எந்த விதமான அமைதி? நாம் தண்ணீரையும் இழந்தோம், பணத்தையும் இழந்தோம்.

இனி சிந்து நதி நீரை இந்தியாவிற்காகவும், இந்திய விவசாயிகளுக்காகவும் பயன்படுத்துவோம்” என்று பேசியுள்ளார்.

இந்தப் பேச்சு இந்திய அளவில் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பாமக: மனதை மாற்றிய தேர்தல் தோல்வி! – கண்கலங்கிய ராமதாஸின் காலில் விழுந்த அன்புமணி – பின்னணி என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியில் மருத்துவர் ராமதாஸுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான...

அடிக்கடி மாறும் தலைவர்கள்; 20% எம்பி-க்கள் நினைத்தால் பிரதமர் காலி… இங்கிலாந்து தேர்தல் சீக்ரெட்!

பிரதமர் ராஜினாமா!16-ம் நூற்றாண்டில் கடல் வழியே புதிய நாடுகளைக் கண்டறியத் தொடங்கிய...

“த்ரிஷா படத்தை வச்சே ஆகணும்'னு நான் ஏன் சொன்னேன்னா.?' – காரைக்குடி மாநகராட்சி கவுன்சிலரின் பதில்

காரைக்குடி மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் என்றாலே விவாதங்களுக்கும் சலசலப்புகளுக்கும் பஞ்சம் இருக்காது....

`தோற்றவர்களைக் கீழாகப் பார்ப்பது தவறானது; முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும்…' – மு.வீரபாண்டியன்

தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. அதில்...