27
June, 2026

A News 365Times Venture

27
Saturday
June, 2026

A News 365Times Venture

'தேங்க்யூ CM சார்' – மறுக்கப்பட்ட சாமி கும்பிடும் உரிமை; கோயில் நுழைவு மேற்கொண்ட பட்டியலின மக்கள்

Date:

பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய பல தலைமுறைகளாக மாற்று சமூகத்தினரால் தடை விதிக்கபட்டு இருந்த நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகத்தின் அதிரடி செயல்பாட்டால் பட்டியலின மக்கள் தடை நீங்கி, முதல் முறையாக கோயிலுக்குள் நுழைந்து, சாமி தரிசனம் செய்தனர்.

அவர்கள் ‘தேங்க்யூ சி.எம் சார்’ என்று தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

vazhipaadu

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், புஞ்சை கடம்பன்குறிச்சியில் அருள்மிகு மாரியம்மன் மற்றும் அருள்மிகு செல்லாண்டி அம்மன் ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இந்த திருக்கோயில்களில் பல ஆண்டுகளாக பட்டியின மக்கள் வழிப்பாடு செய்ய தடை ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

இத்தனைக்கும், இந்த கோயில்கள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. இருப்பினும் அங்குள்ள மாற்று சமூக மக்கள், பட்டியலின சமூக மக்கள் அந்த கோயில்களில் வழிபாடு நடத்த தடை விதித்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், கடந்த மே 19-ம் தேதி புஞ்சை கடம்பங்குறிச்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் திருவிழாவின் போது கோயிலுக்குள் நுழைந்து வழிபாடு நடத்த பட்டியலின மக்களுக்கு வழக்கம்போல கோயில் நுழைவு உரிமை மறுக்கப்பட்டு தீண்டாமை கடைபிடிக்கப்பட்டதாக புகார் எழுந்தத்ஹு

இதுகுறித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் தமிழக அமைச்சருக்கு அப்பகுதி பொதுமக்கள் சார்பில் ஊர் முக்கியஸ்தர் பொன்.முத்துக்குமார் புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். அந்தப் புகாரின் பேரில், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள தமிழக முதலமைச்சர் விஜய், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

vazhipaadu

இதனைத் தொடர்ந்து, மறுநாள், மே 20-ம் தேதி வாங்கல் காவல் நிலையத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த கோயில் நிர்வாக குழு உறுப்பினர்கள் முருகேசன் மற்றும் குப்புசாமி ஆகிய 2 பேர் மீது ஐந்து பிரிவுகளில் வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து, மண்மங்கலம் வட்டாட்சியர் குமரேசன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தையும் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் தலைமையில் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அமைதிப் பேச்சுவார்த்தையானது தொடர்ந்து நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஜூன் 20-ம் தேதி அருள்மிகு மாரியம்மன் மற்றும் செல்லாண்டி அம்மன் கோயில் நிர்வாகப் பொறுப்பினை மேற்கொள்ள இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நிர்வாக அலுவலர் சண்முகம் என்பவர் நியமிக்கப்பட்டார் .

vazhipaadu

இதனைதொடர்ந்து, தீண்டாமையை ஒழித்து, மனிதநேயத்தை வளர்த்து, அனைவரும் சமம் என்ற உயரிய கோட்பாட்டை நிலைநிறுத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு 100 -க்கும் மேற்ப்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் மாவிளக்கு எடுத்து, ஊர்வலமாக வந்து, காலம் காலமாக, கோயிலுக்குள் உள்ளே நுழைந்து வழிப்பாடு நடத்தும் உரிமையை மறுத்து மீட்டு கொடுக்கும் வகையில், கோவில்களுக்கு உள்ளே சென்று வழிபாடு செய்தனர். பட்டியலின மக்கள் பன்னெடுங்காலமாக மறுக்கப்பட்ட சாமியை வணங்கும் உரிமையை பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர்.

இதுகுறித்து, கடம்பன்குறிச்சி ஊர் முக்கியஸ்தரான பொன் முத்துக்குமார் பேசும்போது,

“மூன்று தலைமுறைகளுக்கு மேலாக கோயிலுக்குள் உள்ளே சென்று அம்மனை வழிபாடு நடத்தும் உரிமை மறுக்கப்பட்டு, மாற்று சமூகத்தினர் தீண்டாமையை கடைப்பிடித்து வந்தனர். திருவிழாவின் போது கோயிலுக்கு வெளியே நின்று மாவிளக்கு பூஜை செய்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்து வந்தனர். அப்போது, நாங்கள் கூனி குறுகி போவோம். இம்முறை கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளதாக கிராம மக்கள், மற்றொரு தரப்பிடம் கூறிய போது, அதனை ஏற்க மறுத்தனர்.

இது தொடர்பாக, புதிதாக ஆட்சி அமைத்த தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியதன் அடிப்படையில், சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வகையில், திறமையாக பிரச்னையை கையாண்டு எந்த ஒரு சாதி மோதல்களும் உருவாகாத வண்ணம் சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தி இன்று கோயிலில் சென்று கருவறை அருகில் வழிபாடு நடத்தும் உரிமையை தமிழக அரசு நிர்வாகமும், கரூர் மாவட்ட காவல்துறையும் மீட்டு கொடுத்துள்ளது. எங்கள் கிராம மக்கள் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

pon.muthukumar

சமூக நல்லிணக்கம் காக்கப்பட்டு இறைவழிபாடு என்பது சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. முந்தைய ஆட்சி காலத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவதற்கு சட்ட ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவு இருந்தும், கோயிலை பூட்டி சீல் வைத்து இரு தரப்பினரும் வழிபாடு நடத்த முடியாத சூழ்நிலையே பல்வேறு கோயில் பிரச்னைகளில் இருந்து வந்துள்ளது. ஆனால், புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில், பிரச்னையை சிறப்பாக கையாண்டு தீண்டாமை ஒழிக்கப்பட்டு, வழிபாட்டு உரிமை பலத்து தலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்ததை மீட்டு கொடுத்துள்ளது மிகுந்த வரவேற்கத்தக்க ஒன்று. இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதும் தொடர்ந்தால், பட்டியல் சமூக மக்கள் இந்த அரசை மெச்சுவார்கள்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பிரியா விடை நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக.!' – டெல்லி பிரதிநிதிக்கு தினகரன் எதிர்ப்பு

'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவை தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு...

கிருஷ்ணகிரி: இடிந்து விழும் கூரைகள்; மழை வந்தால் குளமாகும் வீடு; பயத்துடன் வாழும் பழங்குடியினர்

"இருபது ஆண்டுகளுக்கு முன் அரசு கட்டிக்கொடுத்த வீடுகள் எல்லாம்...