3
May, 2026

A News 365Times Venture

3
Sunday
May, 2026

A News 365Times Venture

`நானே ராஜா; அன்புமணி வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்..!’ – ராமதாஸ் கொடுத்த பதில்

Date:

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரத்தில் பாமக மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “சட்டப்பேரவை தேர்தலில் 50 தொகுதிகளில் ஜெயிப்பதற்கான வித்தைகளைச் சொல்லி கொடுத்தேன்.

இராமதாஸ் – அன்புமணி

`பாமக-வில் நானே ராஜா’

50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளைப் பகிர்ந்துக்கொல்வதற்கான கூட்டம் இது. செயல்பட முடியவில்லை என்று யாரும் விருப்பம் தெரிவித்தால் விரும்பியப்படி மாற்றப்படுவார்கள்” என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து அன்புமணி கூட்டத்திற்கு வராதது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த அவர், “ அன்புமனி வரலாம், வந்துக்கொண்டிருக்கலாம்” என்று பதில் அளித்திருக்கிறார்.

மேலும், “சிங்கத்தின் கால்கள் பழுதாகாதபோது சீற்றம் இன்னும் அதிகமாகத் தானே இருக்கும். ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்ற அந்த சீற்றம், எண்ணம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது” என்றார். மேலும் பாமக-வில் தானே ராஜா என்றும் தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

முதல் தேர்தல் தொடங்கி இன்று வரை – கோட்டையைப் பிடித்தவர்கள், கோட்டை விட்டவர்கள் யார், யார்? | Depth

இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை 16 சட்டமன்றத் தேர்தல்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன....

"சாவர்க்கர் ஆங்கிலேய அரசுக்கு கருணை மனுக்களை எழுதியது உண்மை; ஆனால்…" – சாவர்க்கரின் கொள்ளு பேரன்

லண்டனில் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆற்றிய உரையில், சாவர்க்கர் குறித்து அவதூறாகப்...

வேளாங்கண்ணி: சர்ச் முன்பு திரண்ட தொண்டர்கள்; ரத்தான விஜய் வருகை; விமர்சனத்துக்கு உள்ளான தவெக கோஷம்!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நாளை எண்ணப்படுகிறது. எக்ஸிட் போல் கருத்துக்...