22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

”நம்ம கட்சி திமுக கூடாரமா மாறிட்டு வருது தலைவரே…” – விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தவெக நிர்வாகி

Date:

தூத்துக்குடி மாவட்ட த.வெ.கவில், புறநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் மதன் ராஜாவும், மத்திய மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஸ்ரீநாத்தும், தெற்கு மாவட்டச் செயலாளராக பிரைட்டரும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், புறநகர் மாவட்ட செயலாளரான அமைச்சர் மதன் ராஜா, கடந்த சில மாதங்களாக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகளைக் காரணமே கூறாமல் தன்னிச்சையாக பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது ஆதரவாளர்களுக்கும் உறவினர்களுக்கும், மாற்றுக் கட்சியில் இருந்து இணைந்தவர்களுக்கும் த.வெ.க-வில் புதிய பொறுப்புகளை வழங்கி வந்ததாகக் கூறப்படுகிறது.

வீடியோவில் பேசும் முத்துக்குமரன்

இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்த குழந்தை ராஜா என்பவரை பதவியிலிருந்து நீக்கிவிட்டு, தனது உறவினரும் தி.மு.கவைச் சேர்ந்தவருமான பாரத் என்பவரைப் புதிய ஒன்றிய செயலாளராக அமைச்சர் மதன் ராஜா அறிவித்துள்ளாராம்.  

இந்தத் திடீர் பதவி மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மனமுடைந்தும், குழந்தை ராஜாவின் ஆதரவாளரும் த.வெ.க தெற்கு ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளருமான முத்துக்குமரன் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் நேரடியாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

முன்னதாக, த.வெ.க தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்க்கு அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோவில், “2000-ம் ஆண்டிலிருந்து கடந்த 26 ஆண்டுகளாக உங்களது தீவிர ரசிகனாக உங்களுடன் பயணித்து வருகிறேன். நீங்கள்தான் என் உலகம், என் உயிர் என்று வாழ்ந்து வருகிறேன். விஜய் மக்கள் மன்றத்தில் இயங்கி வந்த நான், நீங்கள் கட்சித் தொடங்கியபோது தீவிரமாகக் கட்சி இணைந்து பணியாற்றினேன்.

இன்று நீங்கள் முதல்வராகப் பொறுப்பேற்றிருப்பது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், தூத்துக்குடி புறநகர் மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நடக்கும் குளறுபடிகளைப் பார்க்கும்போது உங்களின் பெயர் தொடர்ந்து களங்கப்பட்டு வருகிறது. இது குறித்து உங்களுக்குப் பலமுறை இ-மெயில் அனுப்பியுள்ளேன். நேரில் பேசவும் முயற்சித்தேன்.

விஷமருந்திய முத்துக் குமரன்
விஷமருந்திய முத்துக் குமரன்

ஆனால், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நமது கட்சி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, மாற்றுக்கட்சிகளில் இருந்து நமது கட்சிக்கு வந்தவர்களுக்குக் குறிப்பாக, தி.மு.க-வில் இருந்து புதிதாக வந்தவர்களுக்கே நமது கட்சியில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் நமது கட்சி தி.மு.கவின் கூடாரமாகவே மாறி வருகிறது.

உங்களுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கிலேயே இங்குள்ள நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்” என்று வேதனையுடன் கூறிக்கொண்டே அவர் விஷம் அருந்தியுள்ளார். 

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ  வைரலாகி வருகிறது. விஷம் அருந்திய முத்துக்குமரன் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்!

சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி...

தாராபுரம்: திமுக நிர்வாகிகள் வீட்டில் ரூ.48 லட்சம் பறிமுதல்| தீவிர விசாரணையில் தேர்தல் பறக்கும் படை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதியில் அக்டோபர்- 6- ம் தேதி...

'நெடுஞ்சாலைகளில் 70 கி.மீ வேகத்துக்கு மேல் சென்றால் அபராதம்!' – அமைச்சர் ஆதவ்வின் புது திட்டம்!

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனா, அத்துறையின் பொறியாளர்களுடன் துறை...

ஜெம் வீரமணி வழக்கு: "திமுக-வும், தவெக-வும் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல்..!"- வானதி சீனிவாசன்

"ஜெம் நிறுவனர் வீரமணி மீதான வழக்கில் திமுக-வும், ஆளுங்கட்சியான தவெக-வும் ஒருவருக்கொருவர்...