22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு வலுக்கும் எதிர்ப்பு; போலீஸார் பாதுகாப்புடன் நடைபெறும் பிரசாரம்!

Date:

தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 – ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்‌. முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில், தாராபுரம் தனி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க- வில் இணைந்தார். தற்போது த.வெ.க கட்சி வேட்பாளராக மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்கியிருக்கிறார். இந்த விவகாரம் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமன்றி த.வெ.க மற்றும் விவசாய அமைப்புகள் மத்தியிலும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிராகப் பிரசாரக் கூட்டங்களில் சிலர் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சத்தியபாமா பிரசாரத்துக்கு 50 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு சேகரிக்க அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் காவல்துறையினர் பின்தொடர்ந்து சென்று பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு...

"கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" – வீரபாண்டியன் பதிலடி

"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" என்று...

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் கேட்ட விவசாயி – என்னக் காரணம் தெரியுமா?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47)....

'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி – காரணம்?

நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல்...