2
June, 2026

A News 365Times Venture

2
Tuesday
June, 2026

A News 365Times Venture

"தேர்தல் பிரச்சார MOOD-ல் இருந்து அவர் வெளிய வரல.!”- முதல்வர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் அட்வைஸ்

Date:

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் இன்று (ஜூன்.2) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று திருச்சிக்குச் சென்றிருந்தார். அவர் இன்னும் தேர்தல் பிரசார Mood-ல் இருந்து வெளிவராத மாதிரி தோன்றுகிறது. அவர் அரசாங்க Mood-க்கு வர வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன்

முதலமைச்சர் ஆகிவிட்டார். மக்கள் அவருக்கு வாய்ப்பு அளித்திருகிறார்கள். அவர் பெண்களின் பாதுகாப்பிற்காக போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது நான் கோயம்பேடு வழியாகத் தான் வந்தேன். கோயம்பேட்டில் பட்டப்பகலில் கார் ஏற்றி ஒரு இலங்கை பெண் கொல்லப்பட்டிருக்கிறார். பாரில் ஏற்பட்ட பிரச்னையால் கொல்லப்பட்டிருக்கிறார். இதனைச் சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது.

‘6 மாதம் விமர்சிக்க மட்டோம் என்று சொன்னார்கள் ஆனால் 6 நாள்களிலியே விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்’ என்று முதல்வர் சொல்கிறார்.

எதிர்க்கட்சிகள் விமர்சிக்காமல் இருக்க முடியாது. ஆனால் முதலமைச்சர் அவர்கள் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பில் இன்னும் இன்னும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

முதல்வர் ஜோசப் விஜய்
முதல்வர் ஜோசப் விஜய்

வேறு கட்சியில் இருந்து ஆட்களை சேர்க்கின்ற கவனத்தை பெண்கள் பாதுகாப்பில் செலுத்த வேண்டும் என்பது எங்களது தாழ்மையான வேண்டுகோள்.

Black & White-ல் தான் இருக்கிறேன் என்று சொல்கிறார். அப்படி இருந்தால் பரவாயில்லை. ஆனால் மொத்தமாக Black-ஆக மாறிவிடப்போகிறது. அமைச்சர்களை அழைத்து நிர்வாகத்தை சரிசெய்ய வேண்டும் என்பது என்னுடைய கருத்து” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`விஜய் Bro… உங்களை இயலாதவர் என்று சொல்வதில் என்ன தவறு?'- முதல்வரின் விமர்சனங்களுக்கு ஆ.ராசா பதில்!

முதல்வர் விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் என இரண்டு தொகுதிகளில் தேர்தலை...

எஸ்.பி.வேலுமணியை ’துரோகி' என்ற அதிமுக தொண்டர் – பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் பரபரப்பு!

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார்...

`சுய விருப்பத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றமல்ல; காவல்துறை அவர்களை..!' – உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் மனிதக் கடத்தலைத் தடுக்கவும், வணிக ரீதியான பாலியல் சுரண்டலை ஒடுக்கவும்...

`அணி மாறுவதில் வைகோ 8 அடி பாய்ஞ்சா துரை 16 அடி பாய்வார்னு நிரூபிக்கிறார், அவ்வளவுதான்'- மல்லை சத்யா

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தங்களுடைய வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது...