திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை (ரிவீயூ பெட்டிசன்) ஒருபொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.
இடைக்காலத்தீர்ப்பு வந்தவுடன் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு அரசின் சீராய்வுமனுவை விடுமுறை முடிந்தவுடன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல், ‘நீதிமன்ற அவமதிப்பு’ வழக்கிற்கு முன்னுரிமை கொடுத்தது ஏன்?
இதில் இவ்வளவு அவசரமும் ஆத்திரமும் ஏன்? உச்சநீதிமன்றம் இதனை தனது ‘ஈகோ’ பிரச்சினையாகக் கருதுகிறதா?
சமூக நல்லிணக்கத்தைவிடவும் உச்ச நீதிமன்றத்தின் ஈகோ தான் முதன்மையானதா?
எத்தனையோ தீர்ப்புகள் இப்படி நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றனவே?! குறிப்பாக, சபரிமலையில் பெண்கள் பங்பேற்பது பற்றி அளிக்கப்பட்ட தீர்ப்பு கிடப்பில் போடப்பட்டிருப்பதைப் பற்றி ஆத்திரப்படாத உச்சநீதிமன்றம் இந்தப் பிரச்சினையில் தீவிரம் காட்டுவது ஏன்?
கார்த்திகை திருநாளன்று தீபம் ஏற்றுவதுதான் மரபு. அதனையும் தகர்த்தெறிந்துவிட்டு தொடர்பில்லாத ஒருநாளில் தீபம் ஏற்ற ஆணையிடுவது உச்சநீதிமன்றத்தின் அதிகாரவலிமையைக் காட்டும் ஈகோ தானே?

இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மக்களுக்கான நீதியா? அல்லது நீதிமன்றத்தின் உச்சநிலை அதிகாரத்தைக் காட்டும் ஆதிக்கப் போக்கா?
சிஆர்பி௭ஃப் -துணை இராணுவப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் திருப்பரங்குன்றம் மலையை ஒப்படைப்பது மாநில அரசின் உரிமைகளை நசுக்கும் மேலாதிக்கம் தானே?
இது பேரதிர்ச்சியையும் பேரச்சத்தையும் அளிக்கிறது!” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb




