5
May, 2026

A News 365Times Venture

5
Tuesday
May, 2026

A News 365Times Venture

'தாயை அடிக்க முயன்றார்; வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து.!' – அன்புமணி மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

Date:

பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார். அன்புமணி குறித்து பேசிய அவர், “மேடை நாகரிகமும், சபை நாகரிகமும் இல்லாமல் செயல்படுகிறார் அன்புமணி. தான் செய்த செயலை மறைத்து கட்சியினரிடமும் மக்களிடமும் அனுதாபம் பெற அன்புமணி முயற்சித்து வருகிறார்.

இராமதாஸ்

தாயை அடிக்க முயன்றவர்

எனது சக்தியை மீறி 35 வயதில் டாக்டர் அன்புமணியை மத்திய மந்திரி ஆக ஆக்கியது எனது முதல் தவறு. அவருக்கு தலைமை பொறுப்பு இல்லை. நான் செய்த சத்தியத்தை மீறி அவரை அமைச்சராக்கியது பெரிய தவறு. வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து. அழகான ஆளுயர கண்ணாடியான பாமகவை ஒரு நொடியில் உடைத்தது யார்?

அன்று மேடையில் மேடை நாகரீகம் இல்லாமல் காலை ஆட்டிக்கொண்டு இருந்தது சரியா… மைக்கை தலை மேல் தூக்கு போடுவது போல் போட்டாரே. ” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மேலும், “அன்புமணிக்கு தலைமைப் பண்பு கொஞ்சம் கூட இல்லை. அவர்தவறான ஆட்டத்தை ஆடி வருகிறார். ஏதோ போகிற போக்கில் குற்றம் சாட்டவில்லை ஆதாரத்துடன்தான் சொல்கிறேன்.” என்றிருக்கிறார்.

“பாமக பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணியின் செயல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் மேடை நாகரிகம் இல்லாமல் செயல்பட்டது யார்? தாயை அடிக்க முயன்றவர். தனது தாயை பாட்டில் எறிந்து தாக்க முயன்றவர் அன்புமணி. தனது குருவை அவமதித்தவர்.” என்றெல்லாம் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார்.

மேலும், “பொதுக்குழுவிற்கு தமிழ்க்குமரன் வரக்கூடாது என்று அன்புமணி என்னிடம் கூறினார். பாமகவை யார் உழைத்து வளர்த்தார்கள். சோறு தண்ணீரின்றி கிராமங்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தேன்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு வளர்த்த கழகத்தைக் கலங்கடித்திருக்கிறார் அன்புமணி. தகப்பனிடம் தோற்பது என்பது மானக்கேடு இல்லை. எப்படி இருந்தாலும் கட்சி உங்களிடம் தான் வரும். அன்புமணி தான் தவறான ஆட்டத்தைத் தொடங்கினார். கூட்டத்திற்கு நிர்வாகிகள் வருவதை அன்புமணி தடுத்தார்.” என்றிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY 

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒட்டன்சத்திரம்: சோபிக்காத த.மா.கா; சம்பவம் செய்த சக்கரபாணி – 7வது முறை வெற்றி சாத்தியமானது எப்படி?

ஒட்டன்சத்திரம் தொகுதியில் தொடர்ந்து ஆறு முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தார்,...

`பொற்கோயில் ஆசியும், போர் யானை முழக்கமும்!’ – வேலூரில் சொல்லி அடித்த தவெக வினோத் கண்ணன்!

வேலூர் தொகுதியில், தி.மு.க சார்பாக சிட்டிங் எம்.எல்.ஏ ப.கார்த்திகேயன், அ.தி.மு.க-வில் மாவட்டச்...

MGR காலத்து அரசியல் குடும்பம்; விஜய் நண்பர் – தூத்துக்குடியில் அமைச்சரையே வீழ்த்திய ஸ்ரீநாத் யார்?

விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் இறுதி படமான ஜனநாயகன்...

TVK: தொண்டர் டு மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்; தவெக சுனில் ஆனந்த் பின்னணி என்ன?

மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் உள்ள 2 லட்சத்து 82 ஆயிரத்து...