23
July, 2026

A News 365Times Venture

23
Thursday
July, 2026

A News 365Times Venture

”தவெக-வில் சீனியர்களுக்கு மரியாதை இல்லை என நான் கூறவே இல்லை”- கடம்பூர் ராஜூ விளக்கம்!

Date:

முந்தைய சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எ.ல்ஏ-க்கள் சிலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் 3 முறை கோவில்பட்டிதொகுதியில் வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவும் அ.தி.மு.கவில் இருந்து விலகி தன்னை த.வெ.கவில் இணைத்துக் கொண்டார்.  

இந்த நிலையில் சமீபத்தில்  “யாரும் த.வெ.க-வில் இணைய வேண்டாம். சீனியர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. முதல்வர் விஜய்யை கூட சந்திக்க முடியவில்லை”  என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

கடம்பூர் ராஜூ

ஆனால், இதனை கடம்பூர் ராஜூ மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களின் தெய்வீக ஆசியுடன் கடந்த ஜூன் 6-ம் தேதி, சாதி, மத பணக்கலாச்சாரம் ஆகியற்றை முற்றிலும் ஒழித்து புதிய யுகம் படைத்திட்ட மக்களின் முதல்வர் விஜய்யின் தலைமையில் புதிய பாதை, புதிய பயணம் என்கின்ற வகையில் புதிய பயணத்தை தொடங்கினோம். தமிழக அரசியலில் இனி என்றும் வெற்றிக்கொடி நாட்டுகின்ற ஒரே இயக்கம் தமிழக வெற்றிக் கழகம்தான்.

லஞ்சம் லாவண்யம், ஊழலற்ற மக்களாட்சி நடத்துகின்ற மாமனிதர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். தாயுள்ளத்தோடு எங்களை அன்போடு அரவணைத்து மக்கள் பணியாற்றும் மாபெரும் வாய்ப்பினை வழங்கியுள்ளார் என்கின்ற பெருமிதத்தோடு எங்கள் பயணம் தொடர்கிறது. இனி தமிழகத்தில் தமிழக வெற்றி கழகம் மட்டும்தான்.

கடம்பூர் ராஜூ

மக்கள் ஏற்றுக்கொள்கின்ற ஒரே இயக்கமாகும். மக்கள் பணி செய்கின்ற அனைத்து கட்சியினரும் தமிழ்நாட்டின் நலன் கருதி அனைவரும் இணையப் போகின்ற ஒரே இயக்கமாகும். சில பொய்யுரைகளையும், கட்டுக்கதைகளையும், வதந்திகளையும் பரப்பி உண்மைக்கு தடை போட முடியாது”  இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“அந்த பெண்ணின் பின்னணி சந்தேகத்துக்குரியது; என்னை சிக்கவைக்க சதி நடக்கிறது’’ – தவெக மா.செ விளக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் அவர்...

"சி.விஜயபாஸ்கர் – வியக்கிறேன்; வைகோ – பேசுவதற்கு ஒன்றுமில்லை!" – நாஞ்சில் சம்பத் 'நச்'

அதிரடி பேச்சுக்குச் சொந்தக்காரரான த.வெ.க பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், 'விஜய்...

ஜந்தர் மந்தரில் தடியடி: "ஒவ்வொரு காவல் அதிகாரியும் நீதி முன் நிறுத்தப்பட வேண்டும்!" – திரிணாமுல்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு எதிராகவும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர...