10
October, 2026

A News 365Times Venture

10
Saturday
October, 2026

A News 365Times Venture

"தளபதி முகத்துக்கான வெற்றி, தவெகவை அசைக்க முடியாது" – கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ கருத்து

Date:

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றது குறித்து, கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் கூறியதாவது, “இது எதிர்பார்த்த வெற்றிதான். தளபதியின் கால் பட்டு வெற்றி பெறாமல் இருக்குமா? இது மகத்தான வெற்றி.

என் சொந்த தொகுதியில் வெற்றி பெறும்போதுகூட இந்த அளவுக்கு நெகிழ்ச்சி ஏற்பட்டதில்லை. தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் கிடைத்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தை இனி அசைக்க முடியாது என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்த வெற்றி தளபதி விஜய்யின் முகத்திற்காகவும், அவர் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும் கிடைத்த வெற்றியாக இருக்கும். மக்கள் தங்களுடைய ஞானத்துடனும் தெளிவான சிந்தனையுடனும் முடிவெடுத்து நிற்கிறார்கள் என்பதை இந்த வெற்றி வெளிப்படுத்துகிறது.

எங்களைப் பொறுத்தவரை, விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் எப்போதுமே வார்த்தைகளால் பதிலளிப்பதைவிடச் செயலின் மூலமாகவே பதிலளிப்போம். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் வெற்றிகள் த.வெ.க தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து கட்சியின் அரசியல் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பினராயி விஜயன் மீது வழக்கு பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு; நிதி முறைகேடு வழக்கில் அதிரடி

கேரள மாநிலம் ​கொச்சியைச் சேர்ந்த தனியார் கனிம நிறுவனமான சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திற்கும்,...

அதிமுக: `நியாயம் வேண்டும்'- எடுபடாத எடப்பாடியின் பிரசாரம்?; இடைத்தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, அதிமுக சார்பில் போட்டியிட்டு...

"எப்போதும் போராடுகிற எங்களுக்குத் தேர்தலும் ஒரு போராட்டமே" – மதுராந்தகம் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பதிவு

மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சுகந்தி போட்டியிட்டார்.இந்தியத் தேர்தல்...

பொதுத்தேர்தல் vs இடைத்தேர்தல்: அதிமுக கோட்டையை வென்ற தவெக; பலத்தை நிரூபித்ததா திமுக? – ஓர் ஒப்பீடு!

கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...