9
October, 2026

A News 365Times Venture

9
Friday
October, 2026

A News 365Times Venture

"எப்போதும் போராடுகிற எங்களுக்குத் தேர்தலும் ஒரு போராட்டமே" – மதுராந்தகம் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பதிவு

Date:

மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சுகந்தி போட்டியிட்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அப்டேட் செய்யப்பட்டுள்ள தரவுகளின்படி, 15-ம் சுற்று முடிவில், சுகந்தி 1,453 வாக்குகள் பெற்றிருக்கிறார். அந்தத் தொகுதியில் முன்னணியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் இருந்து வருகிறார்.

தற்போது சுகந்தி தனது முகநூல் பக்கத்தில், “நாங்கள் தோற்றுவிடவில்லை!

எவராலும் எங்களைத் தோற்கடிக்கவும் முடியாது!

இழப்பதற்கு ஏதுமற்றவர்களுக்காகப் போராடுகிற நாங்கள் இழப்பதற்கும் ஏதும் இல்லை.

எங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்று எப்போதும் மக்களை நாங்கள் குற்றப்படுத்தியதில்லை.

இப்போதும் குற்றப்படுத்தப் போவதில்லை!

எப்போதும் போராடுகிற எங்களுக்குத் தேர்தலும் ஒரு போராட்டமே.

கம்பீரமாகப் போராடினோம்! நூற்றுக்கணக்கான தோழர்கள் மாசற்ற உழைப்பை நல்கினார்கள். தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் சென்றோம்.

வீதிகள் அனைத்திலும் அரசியல் உரையாடல் நடத்தினோம்.

எங்கும் வெறுப்பு இல்லை.

அன்பை மட்டுமே வெளிப்படுத்தினார்கள். ஆதங்கமாய் பேசினார்கள்.

அதுதான் எங்களது நம்பிக்கையாக இப்போதும் முன் செல்கிறது.

எப்போதும் எங்களுக்கு ஓய்வில்லை!

இப்போது இடதுசாரிக் கட்சிகள் இணைந்து வருகிறோம்!

முன்னிலும் பலம் கொண்டு பணியாற்றுவோம்!

அறம் சார்ந்து அரசியலின் அடையாளம் நாங்கள்! உழைக்கும் மக்களின் கடைசி நம்பிக்கை நாங்கள்!

மதுராந்தகம் மக்களுக்கும்

தோழர்களுக்கும் நன்றி.

இன்குலாப் ஜிந்தாபாத்!” என்று பதிவிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பொதுத்தேர்தல் vs இடைத்தேர்தல்: அதிமுக கோட்டையை வென்ற தவெக; பலத்தை நிரூபித்ததா திமுக? – ஓர் ஒப்பீடு!

கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

அமெரிக்கா கிரீன் கார்டு கட்டுப்பாடு: கவலைப்பட வேண்டுமா? இந்தியாவுக்கு காத்திருக்கும் வாய்ப்பு என்ன?

அமெரிக்காவின் தொழிலாளர் துறையானது காக்னிசன்ட், இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS),...

தவெக: 'சாதகமான இடைத்தேர்தல் முடிவுகள்' – கூட்டணி கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நடந்தத் தேர்தல்...

இடைத்தேர்தல் வெற்றி: 'எல்லாமே மாறும்' – சொல்லி அடித்த முதல்வர் விஜய்!

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழக அரசியலில் ஒரு புது...