9
October, 2026

A News 365Times Venture

9
Friday
October, 2026

A News 365Times Venture

தவெக: 'சாதகமான இடைத்தேர்தல் முடிவுகள்' – கூட்டணி கணக்கில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

Date:

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நடந்தத் தேர்தல் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல். அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்கள், 11 நாள்களிலேயே தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அதிமுக-விலிருந்து வெளியேறி தவெக-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து காலியாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய தனித் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, ஐந்து முனைப்போட்டியாக, தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்தில் இறங்கின.

மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணித் தலைவர்கள்

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு 6-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இரு தொகுதிகளிலும் ஆளும் தவெக வேட்பாளர்களே வெற்றிபெற்றிருக்கிறார்கள் .

இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு கூட்டணிக் கணக்குகள் மாறக்கூடும் என்ற பேச்சுகளும் எழுகின்றன. ‘மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ என்ற பெயரில், காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், மதிமுக ஆகிய கட்சிகள் இணைந்துதான் இந்த இடைத்தேர்தலை எதிர்க்கொண்டன.

ஆனால், உடன் இருந்த பெரும்பாலான கட்சிகள் இல்லாமல், ஏறத்தாழ தனித்தே களமிறங்கின திராவிடக் கட்சிகளான திமுகவும் அதிமுகவும். மேலும், இந்த இடைத்தேர்தலில், அதிமுக-வுடன் கூட்டணியில் இருந்த ஜி.கே வாசன் வெளிப்படையாக தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். அதனால், கட்சிகளின் எண்ணிக்கை கணக்கின் அடிப்படையில் த.வெ.க கூட்டணியே பலமானது. தவெக ஆட்சி அமைக்க வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்த இடதுசாரி கட்சிகள் இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்டன. மேலும், தேர்தல் பிரசாரங்களிலும் தவெக அரசை கடுமையாக விமர்சித்தன. எனவே, இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு இடதுசாரிகளின் ஆதரவு நிலைப்பாட்டில் சில மாற்றங்கள் வர வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இடதுசாரிகள்
இடதுசாரிகள்

மேலும், ஆட்சி அமைத்தபோது ஆளுநர் உரையிலேயே பா.ம.க-வின் `சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்’ என்றக் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மேலும், சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணிக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் மூலம் பாமக-வை தவெக- தன் கைப்பிடியிலேயே வைத்திருந்ததை கவனிக்க முடியும்.

மரகதம் குமரவேல் ராஜினாமா செய்தபோது அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனப் பேசிய அன்புமணி, சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த அன்புமணி, ‘இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை’ என ஜகா வாங்கினார். அதேநேரம், தேர்தல் அறிவிக்கப்பட்டப் பிறகு பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி அமைச்சராகவிருப்பதாக செய்திகள் கசியவிடப்பட்டன. மேலும், அதிமுகவுக்கு பாமக ஆதரவளிக்காததை முன்வைத்து, அக்கட்சி தவெக கூட்டணியில் இணையலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.

அதேநேரம், இந்தத் தகவல்கள் திட்டமிட்டு கசியவிடப்படுவதாக விமர்சித்த திருமாவளவன், தவெக-விசிக கூட்டணி பலமாக இருப்பதாகவும், ஆதரவு தொடரும் எனவும் காணொளி மூலம் பேசினார்.

விஜய், அன்புமணி, சௌமியா

ஆனால், முரண்படும் இடதுசாரிகள், தவெக அரசின் முடிவுகளை விமர்சிக்கும் விசிக என கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளில் தவெக தலைமை அப்செட் எனக் கூறப்படுகிறது. முந்தைய திமுக ஆட்சியின் போது ஆளும் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் அப்போதைய திமுக அரசை கடுமையாக எதிர்க்கவில்லை. ஆனால் தற்போது த. வெ. க அரசை கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் கடுமையாக விமர்சிக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளை தாங்கள் உருவாக்கிய கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியும் கைகொடுக்கவில்லை. பல விவகாரங்களில் ஆளும் தரப்புக்கு கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கூட்டணி கட்சிகளின் மீது அதிருப்தி இருந்தாலும் ஆட்சியை தக்க வைப்பதற்கு அவர்களின் ஆதரவு என்பது தேவையாக இருந்ததால் மௌனமே பதிலாக இருந்தது. எனினும் தற்போது கிடைத்திருக்கும் இரு தொகுதிகளின் வெற்றி மற்றும் மீதம் இருக்கும் ஐந்து தொகுதிகளிலும் வெற்றியை ஈட்டிவிட்டால் ஆளும் தரப்பிலிருந்து இதே மௌனத்தை எப்போதும் எதிர்பார்க்க முடியாது. இதை கம்யூனிஸ்டு கட்சிகளும் உணர்ந்தே உள்ளதால் தான் இந்த தேர்தலில் அவர்கள் களமிறங்கினார்கள். தற்போதைய தேர்தல் முடிவுகள் திமுக அதிமுக கூட்டணி கணக்குகளில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை எனினும் த. வெ. க தரப்பில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை அறிய மீதம் இருக்கும் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் முடிந்து அதன் முடிவுகளும் அக்கட்சிக்கு சாதகமாக வரும் பட்சத்தில் தான் எதிர்பார்க்க முடியும்.

என்ன இருந்தாலும் இது அரசியல் தானே…. எதுவும் நடக்கலாம்! பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

இடைத்தேர்தல் வெற்றி: 'எல்லாமே மாறும்' – சொல்லி அடித்த முதல்வர் விஜய்!

தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்று, தமிழக அரசியலில் ஒரு புது...

தாராபுரம்: ''நம்பிக்கைத் துரோகம், உள்ளடி வேலை'' – அதிமுக மூன்றாவது இடம் பிடித்த பின்னணி என்ன?

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மூன்றாவது இடத்துக்கு வந்து அதிர்ச்சி...

கூட்டணி பலமின்றி களமிறங்கிய திமுக; வாக்கு சதவிகிதம் ஓர் ஒப்பீடு; 3 ப்ளஸ்கள் என்னென்ன?

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்யபாமா என இடைத்தேர்தல் நடந்த இரண்டு...

"நம்மை கேலி செய்தவருக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது" – எடப்பாடி பழனிசாமி

நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக...