9
November, 2026

A News 365Times Venture

9
Monday
November, 2026

A News 365Times Venture

தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மட்டும் 9 கொலைகள்… அதிரவைக்கும் க்ரைம் ரேட்!

Date:

தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை நாளான நேற்று (நவ. 8) மட்டும் 9 கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் 9 பேர் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

திருச்சியில் 3 பேர் கொலை

திருச்சி சமயபுரம் பகுதியில் கூலி வேலை செய்து வந்த 17 வயதான ராகுல் மற்றும் விஷால் ஆகிய இரு சிறுவர்கள் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். முகம் சிதைந்த நிலையிலும், தலைக் காயங்களுடனும் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. முன்விரோதம் காரணமாக இந்த அசம்பாவிதம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திருச்சி புறத்தாக்குடி பகுதியில் கிறிஸ்டோபர் என்ற தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவன ஊழியரும் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

க்ரைம்

கடலூரில் துப்பாக்கிச் சூடு

கடலூர் பெரிய கட்டுப்பாளையம் பகுதியில் நண்பர்களுடன் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில், பிரிதிவிராஜ் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலையில் ஈடுபட்ட ரவுடி அருளரசு மற்றும் அவரது தம்பி அன்பரசன் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில், பதுங்கியிருந்த அருளரசை காவல்துறையினர் காலில் சுட்டுப் பிடித்தனர்.

தேனியில் ரீல்ஸ் மோகத்தால் பறிபோன போலீஸ் உயிர்

தேனி சமதர்மபுரம் பகுதியில் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த மதுபோதை கும்பலைத் தட்டிக்கேட்ட, காவலத்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் (ASI) செந்தில்குமார் என்பவரை அந்த கும்பல் கொடூரமாக அடித்துக் கொன்றது. இச்சம்பவம் தொடர்பாக 3 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மற்றும் திருவள்ளூரில் தொடர் கொலைகள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஜாமீனில் வெளிவந்த ரெளடி விக்னேஷ் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்டார். உடன் இருந்த அவரது நண்பர் முனியாண்டி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், கல்லல் அருகே நவீன் என்ற மற்றொரு ரௌடியும் படுகொலை செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் சென்றான்பாளையம் பகுதியில், ஆந்திராவைச் சேர்ந்த மேகலா (24) என்ற இளம்பெண்ணை பிரசாத் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

க்ரைம்
க்ரைம்

வியாசர்பாடியில் கொலை

சென்னை வியாசர்பாடியில் முன்விரோதம் காரணமாக சிலம்பராசன் என்பவரை கொலை செய்ய வந்த கும்பல் வெட்டியதில் அவரது தம்பி தனுஷ் (18) உயிரிழந்திருக்கிறார். நேற்று இரவு சூர்யா மற்றும் அவரது தந்தை உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர். சிலம்பராசன் தப்பியோடிய நிலையில் தனுஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

தீபாவளி பண்டிகை நாளில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த 9 கொலைச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குற்றவாளிகளைக் கைது செய்ய அந்தந்த மாவட்டக் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஒரே நாளில் 9 கொலைகள்: 'எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்?'- உதயநிதி கண்டனம்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு...

"மேக்கேதாட்டூ அணை கட்ட யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" – டி.கே.சிவக்குமார்

மேக்கேதாட்டூ அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறார் கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்.மேக்கேதாட்டூ...

"பாகிஸ்தான், எகிப்திற்கு அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும்" – செனட்டர் அப்துல் எல்-சையத்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார்...

அட்டைப்படம்

Source link