9
November, 2026

A News 365Times Venture

9
Monday
November, 2026

A News 365Times Venture

"மேக்கேதாட்டூ அணை கட்ட யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை" – டி.கே.சிவக்குமார்

Date:

மேக்கேதாட்டூ அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறார் கர்நாடகா முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்.

மேக்கேதாட்டூ அணை கட்டுவதன் மூலம் பெங்களூரின் குடிநீர் தேவைக்காக 10 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் பயன்படுத்தப்படும்.

மழைநீர் கடலில் கலக்காமல் இருக்கவே இந்த அணை. இது தமிழ்நாட்டிற்கே உதவும் என்று டி.கே. சிவக்குமார் தொடர்ந்து கூறி வருகிறார்.

காவிரி ஆற்றின் ஒரு தோற்றம்.

நேற்று (நவம்பர் 8) செய்தியாளர்களிடம் டி.கே. சிவக்குமார், “தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு இந்த நாட்டின் சட்டம் தெரியும் என்று நான் நம்புகிறேன். இதற்கு யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை.

நமக்குச் சொந்தமான இடத்தில் கர்நாடகா அணையைக் கட்டிக்கொள்ளலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டது.

தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய 177 டி.எம்.சி. (TMC) தண்ணீரை நாம் வழங்க வேண்டும் என்பது மட்டுமே அதற்கான நிபந்தனை.

பாஜகவும் ஒத்துக்கொண்டது…

மேக்கேதாட்டூ நீர்த்தேக்கத்தால் தமிழ்நாட்டிற்கும் கூடுதல் பலன்களே கிடைக்கும். இது ஒரு சமநிலை நீர்த்தேக்கம் என்றுதான் அழைக்கப்படுகிறது.

நாங்கள் ஏற்கெனவே பிற பகுதிகளில் சுமார் 5,400 ஏக்கர் வன நிலத்தை அடையாளப்படுத்தியுள்ளோம்.

அதை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளோம். அந்த நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அது முடிந்தவுடனேயே, நாங்கள் நமது விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்போம்.

இந்த விவகாரத்தில் கர்நாடகா ஒற்றுமையுடன் நிற்கிறது. கட்சி எல்லைகளைக் கடந்து, அனைத்து பாஜக மற்றும் என்.டி.ஏ. (NDA) தலைவர்களும் மேக்கேதாட்டூ விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

சண்டை போடும் பேச்சுக்கே இடமில்லை

தமிழ்நாடு முதலமைச்சருக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்; ஒரு குழுவை இங்கு அனுப்பி வையுங்கள். இந்த வாய்ப்பை நாங்கள் தவறாகப் பயன்படுத்த மாட்டோம்.

சண்டை போடும் பேச்சுக்கே இடமில்லை; அந்த நாள்களெல்லாம் கடந்துபோய்விட்டன. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கிவிட்டது. இந்த நாட்டின் சட்டத்திற்கு நாம் மதிப்பளிப்போம்.

ஒன்றிணைந்து செயல்பட்டுத் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வோம். நம்மிடையேயான ஒற்றுமைப் பிணைப்பை மேலும் வலுப்படுத்துவோம்…” என்று பேசியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"பாகிஸ்தான், எகிப்திற்கு அமெரிக்காவின் நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும்" – செனட்டர் அப்துல் எல்-சையத்

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் வழங்கி வரும் சுமார்...

அட்டைப்படம்

Source link

நூல் கொள்முதல் விவகாரம்: “Family Fund; முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல்"- அமைச்சர் அருண் ராஜ்

சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது,...

"புகார் கொடுத்தும் போலீஸ் நியாயமா நடந்துக்கல.!" – ஆடுகளை கொன்ற அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சித்தப்பா?

அமைச்சரானதும் ஊர்க்கிணற்றைப் பூட்டிட்டாங்க ஜெகதீஸ்வரி – வருந்தும் சொந்த கிராம மக்கள்இப்படியொரு...