20
June, 2026

A News 365Times Venture

20
Saturday
June, 2026

A News 365Times Venture

"தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் உயிராய் நேசித்த…" – அதிமுக-விலிருந்து விலகிய விஜயபாஸ்கர்

Date:

அதிமுக சார்பில் ஐந்து முறை போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தவரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து இன்று விலகினார். அதிமுகவிலிருந்து விலகியது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

சி விஜயபாஸ்கர்

அந்த அறிக்கையில், “புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த மகத்தான மக்கள் இயக்கத்தில், ‘அம்மா’ என்ற ஆருயிர் ஒற்றை வார்த்தையால் ஈர்க்கப்பட்டு, என் மாணவர் பருவத்திலிருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகவும், இரண்டாவது தலைமுறையாகவும் என் வாழ்க்கைப் பாதையில் இயக்கத்தோடு என்னை அர்ப்பணித்தவன் நான்.

எனக்கு இந்த இயக்கம் ஓர் அரசியல் அமைப்பு மட்டுமல்ல; என் உணர்வும், என் அடையாளமும், என் வாழ்க்கையின் ஒரு பகுதியும் ஆகும்.

மாணவர் அணியில் தொடங்கிய என் அரசியல் பயணம், எழுச்சி மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், தேர்தல் களங்கள் என இந்த இயக்கம் ஓர் அர்ப்பணிப்புமிக்க தொண்டனாக என்னை வழிநடத்தியது. என் இளமை, என் உழைப்பு, என் கனவுகள் அனைத்தும் இந்த இயக்கத்தோடு பின்னிப்பிணைந்தவை.

அம்மா வாழ்ந்த பொற்காலத்தில், இந்த இயக்கத்தில் பணியாற்றியதை ஒரு பொறுப்பாக மட்டுமல்ல; பெரிய பெருமையாகவும், பெரும் வரமாகவும், என் பாக்கியமாகவும் நான் கருதினேன்.

ஆனால் இன்றோ, தனிப்பட்ட ஒருவரின் தவறான முடிவுகளால் நான் உயிராய் நேசித்த இயக்கம் வேதனைகளையும், சோதனைகளையும் எதிர்கொள்ளும் நிலை உருவாகியிருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இந்தச் சூழலில், மனமெல்லாம் தீராத வேதனையைச் சுமந்தபடி என் பயணத்தைத் தொடர்வது சரியானதாக இருக்காது என்ற உணர்வோடு இந்த முடிவை எடுக்கிறேன்.

சி. விஜயபாஸ்கர் அறிக்கை
சி. விஜயபாஸ்கர் அறிக்கை

எனவே, கனத்த இதயத்துடனும் கலங்கிய மனதுடனும், இதுவரை என்னுடன் பயணித்த ரத்தத்தின் ரத்தங்களான கழகத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொண்டு, இந்த மகத்தான இயக்கத்திலிருந்து மனவலியோடு விலகுகிறேன்.

நான் விலகுவது ஒரு கட்சியிலிருந்து அல்ல; என் வாழ்க்கையின் ஓர் அத்தியாயத்திலிருந்து! வலிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாத நிலையில், கனத்த இதயத்துடன் இயக்கத்திலிருந்து விடைபெற்றாலும், என் மண்ணுக்கான, மக்களுக்கான வாழ்நாள் அர்ப்பணிப்பு வழக்கம்போல் தொடரும்… தொடர்வேன்!” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மாநிலங்களவை எண்ணிக்கை : `திட்டமிட்டு' முன்னேறும் பாஜக – கையறு நிலையில் காங்கிரஸ்! | முழு அலசல்

'தங்களிடம் பெரும்பான்மை பலம் உள்ளதால் எளிதாக வெற்றி பெறலாம்' என்ற நம்பிக்கையில்...

`சில நாய்கள் விசுவாசமாக இல்லை' – பிரிந்துசென்ற எம்.பி.க்கள் மீது எம்.பி. சஞ்சய் ராவத் சாடல்

மகாராஷ்டிராவில் சிவசேனா(உத்தவ்) கட்சியை சேர்ந்த 6 எம்.பி.க்கள் தங்களை தனி அணியாக...

வேலுமணியிடன் உரசல்; எடப்பாடியின் கொங்கு கணக்கு… செந்தில் பாலாஜியின் மெளனம்! – பரபரக்கும் களம்!

செந்தில் பாலாஜி தி.மு.க-விலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க-வில் இணைவதாக கரூர் மாவட்டத்தில்...

விஜய் படங்களுக்கு பணியாயாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர்! – மனோஜ் பரமஹம்சாவுக்கு அரசுப் பொறுப்பு

பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 'ஈரம்',...