தமிழக தேர்தல் களம் பரபரத்துப் போயிருக்கும் நிலையில், மக்களின் பல்ஸ் அறிய களமிறங்கியது ஜூனியர் விகடன் டீம். 539 தன்னார்வலர்கள் மற்றும் மாணவர்கள், 54 நிருபர்கள் என ஒரு பெரும் படையே சென்று 234 தொகுதிகளிலும் சர்வே நடத்தியது. வழக்கமாக, கேள்விகளுக்கான பதில்களை கருத்துக்கணிப்பு படிவத்தில் நிரப்பச் சொல்லி வாக்காளர்களிடம் அளிப்போம். இம்முறை, முழுவதும் டிஜிட்டல் வடிவத்தில் கருத்துக்கணிப்பை நடத்தினோம். அதற்கெனவே உயர் தொழில்நுட்பத்துடனும் சைபர் செக்யூரிட்டியுடனும் செயலி உருவாக்கப்பட்டு, சர்வே எடுப்பவர்களிடம் அளிக்கப்பட்டது.
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள நகரம், உள் கிராமப்புறங்களை வகைப்படுத்தி, அங்கேயெல்லாம் எந்த பாலினத்தவர், வயதுடையவரிடம் சர்வே எடுக்க வேண்டுமென திட்டமிட்டுச் செயல்படுத்தியிருக்கிறோம். தொகுதியிலுள்ள பல்வேறு சமூகத்தினரிடமும் பரவலாகவே சர்வே நடத்தப்பட்டது. அந்த செயலியில் ஜியோ லொகேஷன் வசதி ஏற்படுத்தப்பட்டதால், நாம் சொன்ன இடத்தில்தான் சர்வே நடைபெற்றதா என்பதனை தெரிந்துகொள்ள முடிந்தது. அதன்மூலமாக, துல்லியமான முடிவுகளை நம்மால் கிரகிக்க முடிந்தது என்பது கூடுதல் சிறப்பம்சம்.
தொகுதிக்கு 400 பேர் என, 234 தொகுதிகளிலும் 93,600 பேரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இந்த சர்வேயில், மொத்தமாக ஆறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு துணைக் கேள்வியும் இடம்பெற்றது. இந்தக் கேள்விகள் மற்றும் மக்கள் அவற்றுக்கு அளித்த தெளிவான பதில்கள் என மாவட்ட வாரியாகவும், தொகுதி வாரியாகவும் இந்த வார ஜூனியர் விடகன் இதழில் வெளியாகியிருக்கிறது.
சென்னை துறைமுகம்
சென்னை துறைமுகம் தொகுதியில் தி.மு.க-வில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அ.தி.மு.க-வில் ராயபுரம் மனோ, த.வெ.க-வில் சினோரா P.S.அசோக், நா.த.க-வில் இர.ஃப்பாசன் செரிப் களத்தில் இருக்கிறார்கள்.
துறைமுகத்தின் முகமாக சேகர்பாபு இருந்தாலும், கடந்த முறையைக் காட்டிலும் களம் அவருக்கு இறுக்கமாகவே இருக்கிறது. ரஜினி ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் விஜய் கட்சி வேட்பாளராக மற்ற கட்சிகளின் வாக்குகளைக் கவர்ந்திழுக்கிறார் அசோக். வடமொழி பேசுபவர்கள் வாக்கு கணிசமாக அ.தி.மு.க-வுக்குப் பிரிந்தாலும் தொகுதியில் தனக்கிருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு, உதயசூரியன் வாக்கு வங்கியால் சேகர்பாபுவே முந்தி வருகிறார்.!
தமிழ்நாட்டின் நட்சத்திர வேட்பாளர்கள் நிறைந்த மாவட்டமாக திருவள்ளூர், சென்னை தொகுதிகள் கருதப்படுகிறது. திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், தமிழன் பிரசன்னா, சா.மு.நாசர், மா.சுப்ரமணியன் என திமுகவின் முக்கியப் பிரபலங்கள் போட்டியிடுகின்றன. அதேப் போல அதிமுக சார்பில், டி.ஜெயக்குமார், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போன்றோரும், த.வெ.க சார்பில் விஜய், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் என தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
இந்த தொகுதிகளின் விகடன் மெகா சர்வே முடிவுகளைத் தெரிந்துகொள்ள க்ளிக் செய்யுங்கள்.




