30
October, 2026

A News 365Times Venture

30
Friday
October, 2026

A News 365Times Venture

'சாப்பாடு சரியில்லை என்பதற்காக ஜாமீனா?'- அன்பில் மகேஸ் குறித்து மரிய வில்சன் பேசியதென்ன?

Date:

கடந்த திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க கோடிக்கணக்கில் லஞ்சமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அன்பில் மகேஸ் அளித்த ஜாமீன் மனு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அன்பில் மகேஸை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என காவல்துறை தரப்பில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அன்பில் மகேஸ்

இந்த விசாரணையின் போது அன்பில் மகேஸ் தரப்பில் வாதிட்டதாவது, “இந்த விவகாரத்தில் நியாயமான சுதந்திரமான விசாரணை தேவை. நீதிமன்ற உத்தரவின்படி அன்பில் மகேஸுக்கு முதல் வகுப்பு சிறை வழங்கப்படவில்லை, சரியான உணவு வழங்கப்படவில்லை. மேலும், ‘மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் சப்பாத்தி மட்டுமே வழங்கப்படுவதால், 2 முதல் 4 கிலோ வரை அவருடைய உடல் எடை குறைந்துவிட்டது.

நீதிமன்றம் கூறிய பிறகு கூட வீட்டு உணவு வழங்கப்படவில்லை. அதனால் அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு வழங்கப்பட வேண்டும். அவர் எங்கும் தப்பி ஓடமாட்டார். குற்றத்தை நிரூபிக்கும் வரை அவர் நிரபராதி தான். பணம் கேட்டதாகவோ, வாங்கியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை. அரசியல் காரணங்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்” என வாதிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நீதிபதி சத்தியமூர்த்தி, அன்பில் மகேஸை நவம்பர் 2ஆம் தேதி வரை 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மரிய வில்சனிடம் அன்பில் மகேஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், ” அவர் செய்த செயல் என்ன? கல்வியில் ஊழல்… 300, 400 கோடி ரூபாய். ஆனால், அவர்கள் அங்கு கேட்பது சாப்பாடு சரியில்லை என்று.

‘நான் இதை செய்யவில்லை’ என்று மனுவில் கூறியிருந்தால்கூட பரவாயில்லை. ஆனால், சாப்பாடு சரியில்லை என்றெல்லாம் அன்பில் மகேஸ் ஜாமீன் கோருவதா? இதெல்லாம் ஒரு விஷயமா?” என்று கூறியிருக்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்

தொடர்ந்து, “தவெக அரசை ‘சோப்பலாங்கி அரசு, சுயபுத்தி இல்லாத அரசு’ என விமர்சித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், ” ஸ்டாலின் போன்ற முதிர்ச்சியும் அனுபவமும் வாய்ந்த தலைவர் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது எதிர்பாராதது.

ஒரு தலைவரே இப்படி பேசினால், கீழ்மட்டத் தலைவர்கள் இதைவிட மோசமாகத்தான் பேசுவார்கள். முன்னாள் முதல்வர் இப்படி பேசுவதை மக்களை இழிவுபடுத்தும் செயலாகவே நான் பார்க்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

‘தனுஷ்காக காத்திருக்கும் அதிமுக, சீமானுக்காக காத்திருக்கும் திமுக’ – காங்கிரஸ் விமர்சனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார், “தமிழ்நாட்டு அரசியலில்...

'போலீஸ் கஸ்டடி வேண்டாம்; வீட்டு சாப்பாடு வேணும்!' – புன்னகையோடு புழலுக்கு திரும்பிய அன்பில்!

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய வழக்கில் நீதிமன்றத்தில் காவலில் புழல் சிறையில்...

TNPSC தேர்வுக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த முதல்வர்...

“எடப்பாடியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை" – அமைச்சர் ரமேஷ்

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு நேற்று மதுரைக்குச் சென்ற முன்னாள் முதல்வர்...