30
October, 2026

A News 365Times Venture

30
Friday
October, 2026

A News 365Times Venture

TNPSC தேர்வுக்கு வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்வு… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய்

Date:

அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பை உயர்த்த முதல்வர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார்.

போட்டித் தேர்வுகளின் கோரிக்கையை ஏற்று, அரசுப் பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது உச்சவரம்பினை 5 ஆண்டுகள் உயர்த்தி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்கள் உத்தரவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டித் தேர்வர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் பயனடைவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.

டி.என்.பி.எஸ்.சி

யாருக்கு என்ன வயது உயர்வு?

மேல்வரம்பு வயது உயர்வு இடஒதுக்கீடு பிரிவினருக்கு (BC, BCM, MBC & DNC, SC, ST, ஆதரவற்ற கைம்பெண்கள்) ஏற்கனவே உள்ள வயது சலுகையோடு கூடுதலாக அமையும்.

1. குரூப் – I பதவிகள்:

– பொதுப் பிரிவினர்: 32-ல் இருந்து 37 ஆக உயர்வு

– ஒதுக்கீட்டுப் பிரிவினர் (BC, MBC, SC, ST): 37-ல் இருந்து 42 ஆக உயர்வு

– மாற்றுத்திறனாளிகள் பொதுப் பிரிவு: 42-ல் இருந்து 47

– மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுப் பிரிவு: 47-ல் இருந்து 52 வரை

2. குரூப் – II & II-A:

– பொதுப் பிரிவு: 30-ல் இருந்து 35

– ஒதுக்கீட்டுப் பிரிவு: வயது உச்ச வரம்பில்லை (ஏற்கனவே)

– மாற்றுத்திறனாளிகள் பொது: 40-ல் இருந்து 45

– மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு: வயது உச்ச வரம்பில்லை

TNPSC
TNPSC

3. குரூப் – IV:

– பொதுப் பிரிவு: 30-ல் இருந்து 35

– பொதுப் பிரிவில் பட்டதாரி (Having higher qualification): 32-ல் இருந்து 37

– BC, BCM, MBC & DNC: 32-ல் இருந்து 37 / 40-ல் இருந்து 45

– SC, ST மற்றும் ஆதரவற்ற விதவை: 35-ல் இருந்து 40 / 45-ல் இருந்து 50 வரை!

எப்போது முதல் அமல்?

இந்த வயது உச்சவரம்பு உயர்வு இன்று (30.10.2026) முதல் அடுத்த 5 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'போலீஸ் கஸ்டடி வேண்டாம்; வீட்டு சாப்பாடு வேணும்!' – புன்னகையோடு புழலுக்கு திரும்பிய அன்பில்!

தனியார் பள்ளிகளுக்கு உரிமம் வழங்கிய வழக்கில் நீதிமன்றத்தில் காவலில் புழல் சிறையில்...

“எடப்பாடியின் கருத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை" – அமைச்சர் ரமேஷ்

முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு நேற்று மதுரைக்குச் சென்ற முன்னாள் முதல்வர்...

'சட்டமன்றத்தில என் குரல் ஒலிக்கணும்'னு நிறைய பேர் விருப்படுறாங்க.!'- சீமான் கூறியதென்ன?

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சி...

“இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவு நிலைப்பாடா?" – திமுக தலைவர் ஸ்டாலினின் பதில் என்ன?

பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பசும்பொன்னில் மரியாதை...