சவுதி அரேபியாவிற்கும், ஏமன் நாட்டில் உள்ள பிரிவினைவாத அமைப்பான ஹூதிகளுக்கும் இடையே கடந்த 2015ம் ஆண்டில் இருந்து மோதல் இருந்து வருகிறது. ஏமன் அரசாங்கத்தின் சார்பாக ஏமனின் உள்நாட்டுப் போரில் சவுதி அரேபியா 2015ம் ஆண்டு நுழைந்தது.
இதனால் சவுதி படைகளும் ஹூதிகளும் சண்டையிடத் தொடங்கினர். அதன் பிறகு போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டு 2022ம் ஆண்டு போர்நிறுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, ஹூதிகள் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியது. ஈரானில் இருந்து ஒரு விமானம் ஏமனின் சனா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது சவுதி அரேபியர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அதோடு சவுதி அரேபியப் படைகள் செங்கடல் பகுதியில் முற்றுகையிட்டு ஹூதிகள் ஆட்சி செய்யும் பகுதியைத் தனிமைப்படுத்தியது. ஹூதிகளால் ஆட்சி செய்யப்படும் பகுதிகளைப் பெரும்பாலும் தனிமைப்படுத்தியது.
இதனால் ஹூதிகள், சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது சண்டை தீவிரமடைந்துள்ளது. செங்கடல் பகுதியில் சமீபத்தில் கப்பல்களை ஹூதிகள் தாக்கியது. இந்த வெற்றிகளை முறியடிக்க முயற்சிக்கும் ஏமன் அரசாங்கப் படைகளுக்கு, சவுதி அரேபியா வான்வழி ஆதரவை வழங்கி வருகிறது.
தங்கள் மீது விதிக்கப்பட்ட முற்றுகைக்குப் பதிலடியாக, சவூதி கப்பல் போக்குவரத்தை மட்டுமே குறிவைப்பதாக ஹூதிகள் கூறியிருக்கிறது. சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது இந்த வாரத் தொடக்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில், விமானி ஒருவர் உட்பட மூன்று சவுதி அரேபியர்கள் கொல்லப்பட்டதாக ஹூதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வார காலத்தில், சவுதியின் பிற விமான நிலையங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் உள்கட்டமைப்பு வசதிகள் மீதும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
புதிதாக ரியாத் விமான நிலையத்தில் ஏவுகனைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் நடந்த இத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரிவித்தனர்.
அண்டை நாடான ஏமனில் உள்ள, ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்களே இதற்குக் காரணம் எனச் சவுதி தலைமையிலான கூட்டணிப் படை குற்றம் சாட்டியுள்ளது. உள்நாட்டு விமானங்களுக்கான 3 மற்றும் 4-வது முனையங்கள் அமைந்துள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலைய வளாகத்தின் மீது ஏவுகணை ஒன்று தாக்கியதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பிராந்திய அதிகாரி தெரிவித்தார்.
ஹூதிகளுக்கு எதிராகப் போரிடும் சவுதி தலைமையிலான கூட்டணி, இந்தத் தாக்குதலுக்கு ஹூதிகளே காரணம் என்று குற்றம் சாட்டியதுடன், இதை ஒரு முழுமையான போர்க்குற்றம் என்று வர்ணித்து, இதற்கு உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என்றும், அந்த விமான நிலையத்தில் எந்த ராணுவ வசதிகளும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஈரான் போர் தொடங்கியதிலிருந்து வளைகுடா அரபு நாடுகளில் நிகழ்ந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும். ஹூதிகளுக்கும் சவுதி ஆதரவுடைய ஏமன் அரசுப் படைகளுக்கும் இடையே அண்மையில் மோதல்கள் தீவிரம் அடைந்துள்ளன. இத்தாக்குதலில் அமெரிக்காவும் இறங்க ஆலோசித்து வருகிறது.
ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா மேற்கொள்ளும் தாக்குதல்களில் அமெரிக்காவும் இணைய வேண்டுமா என்பது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
“நாங்கள் இணையக்கூடும். அது குறித்து பரிசீலிக்கவுள்ளோம். சமீபத்திய தாக்குதல் குறித்த தகவல் எங்களுக்கு இப்போதுதான் கிடைத்தது. எனவே, நாங்கள் ஒரு முடிவை எடுப்போம். நாங்கள் மிக விரைவாகச் செயல்படக்கூடியவர்கள்” என்று அவர் மேலும் கூறினார்.ச




