10
November, 2026

A News 365Times Venture

10
Tuesday
November, 2026

A News 365Times Venture

கோவை: பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை; பின்னணி என்ன?

Date:

கோவை பெரியார் நூலகத்திற்கான புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடைபெற்று இருப்பதாகவும், அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்கள் ஏ.ஐ மூலம் போலி எழுத்தாளர்கள் பெயரில் உருவாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான போலிப் புத்தகங்களை, அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு இருப்பதாகவும் எழுந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தப் போலிப் புத்தகங்களை அகற்ற வேண்டும் எனவும், இவற்றை கொள்முதல் செய்து ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எழுத்தாளர்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து பெரியார் நூலகத்தில் இருந்த சர்ச்சைக்குள்ளான அகல் விளக்கு மற்றும் ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தங்கள் அகற்றப்பட்டன.

புத்தகக் கொள்முதல் ஊழல் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இதன்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை பெரியார் நூலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நூலகத்தின் நிர்வாக அலுவலகத்தில் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சர்ச்சைக்குரிய பதிப்பகங்களிடம் இருந்து வாங்கப்பட்ட புத்தகங்கள் எண்ணிக்கை, அதற்காக வழங்கப்பட்ட தொகை, பரிந்துரைந்தவர்கள் பெயர்கள் உள்ளிட்டவை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கிடைக்கும் ஆவணங்கள் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“தாக்கப்பட்டவரையே மிரட்டி வீடியோ; துணை சபாநாயகர் ரவி சங்கருக்கு கண்டனங்கள்" – அண்ணாமலை

தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராகவும், த.வெ.க-வின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் எம்.எல்.ஏ...

POCSO சட்டம்: குழந்தைகளைக் காக்கும் சட்டக் கேடயம்! சட்டம் சொல்வது என்ன? – 13

இரவு நேரத்தில் ஒருவருக்குப் பாலியல் வன்கொடுமை நடந்துவிட்டதாகச் செய்தி வருகிறது. உடனே,...

ஆட்சியருக்கு TVK MLA ஆபாசக் குறுஞ்செய்தி? "இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் விஜய்?" – இபிஎஸ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது...

'அட்டாக் பரந்தாமன்' லைப்ரரி மேட்டரை விட்றாதீங்க! – தவெக செய்தித் தொடர்பாளர்களுக்கு புது அசைன்மெண்ட்!

சென்னை தி.நகரில் உள்ள அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் 'வாய்ஸ் ஆப் காமன்'...